புதன், 22 மார்ச், 2023

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

 21 3 23

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் தர மேலாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தர மேலாளர் (Quality Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Masters in Hospital Administration Health Management / Public Health படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/03/2023031784.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/03/2023031784.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/pudukkottai-health-department-jobs-2023-apply-soon-618016/