29 3 23
மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக 2நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று மற்றும் நாளை என மொத்தம் 2 நாட்கள் இந்த தர்ணா போராட்டம் நடைபெறும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் மீது மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் உடனடியாக மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியை தர வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி இந்த தர்ணா போராட்டத்தை அறிவித்துள்ளார்.மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சாலை மற்றும் வீட்டுவசதித்துறை போன்ற துறைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டி மம்தா பானர்ஜி இந்த தர்ணா போராட்டத்தை அறிவித்துள்ளார்.
இதனையும் படியுங்கள்: மே 10-ம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை!
ஒரு மாநில முதலமைச்சரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source https://news7tamil.live/mamata-banerjee-2-days-dharna-protest-against-central-government.html