செவ்வாய், 28 மார்ச், 2023

ஸ்மார்ட்போன் போதும்.. ஆதார்- பான் எண்ணை இப்படி சீக்கிரம் இணைக்கலாம்

 

ஆதார்- பான் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவித்துள்ளது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது ரூ.1000 அபராதக் கட்டணத்துடன் ஆதார்- பான் இணைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்மார்ட்போன் மூலம் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் ஆதார்- பான் எண்ணை விரைவாக இணைக்கலாம். முன்னதாக உங்கள் போன் இணைய வசதியை சரிபார்த்துக் கொள்ளுங்கள், ஆதார், பான் அட்டையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போனில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometaxindiaefiling.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும். அதில் கேட்டகப்படும் விவரம் குறிப்பிட்டு உள் செல்லவும். இல்லையெனில், உங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தி புதிய கணக்கை தொடங்கவும். உள்நுழைவுக்கான பயனர் ஐடி (user ID) உங்கள் பான் எண் என்பதை நினைவில் கொள்ளவும்.

இப்போது இணைய தளத்திற்குள் சென்ற உடன் “link your PAN with Aadhaar” எனக் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கொடுக்கவும். இல்லையென்றால் profile செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று link Aadhaar செலக்ட் செய்யவும். பின்னர் அதில் கேட்டகப்படும் விவரங்கள் கொடுத்து ரூ.1000 அபராதத் தொகை செலுத்தி இணைக்க வேண்டும்.

அதேபோல், ஆதார் மற்றும் பான் எண்ணை utiitsl.com அல்லது egov-nsdl.co.in அரசு இணையதளங்கள் வழியாகவும் இணைக்க முடியும். மத்திய அரசின் கூற்றுப்படி, பான் அட்டை வைத்துள்ளவர்களில் 20 சதவீத பயனர்கள் இன்னும் ஆதாருடன் இணைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆதார்- பான் இணைக்காதவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

source https://tamil.indianexpress.com/technology/how-to-quickly-link-your-aadhaar-and-pan-from-your-smartphone-621180/


28 3 23