புதன், 29 மார்ச், 2023

UPI பண பரிவர்த்தனை விவகாரம்: எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என Paytm அறிவிப்பு

 29 3 23


பேடிஎம் யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்காது என தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகமானது. இந்தியாவில் இனி “Cashless Transaction” எனும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தான் ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. சமீபத்திய புள்ளி விபரங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் கடந்த காலத்தை விட அதிகமாகியுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில்  யுபிஐ எனப்படும் பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கிய நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளை கொண்ட  QR Code அட்டைகளுடன் வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க  தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது யுபிஐ கணக்கிலிருந்து வியாபாரிகளுக்கு ரூ.2000 க்கும் மேல் பணம் செலுத்தினால் அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது.

தேசிய பரிவர்த்தனை கழகத்தின்  இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனம் தங்களது நிறுவனத்தின் மூலம் பண பரிவர்த்தனையில் ஈடுபடுவர்களுக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது. Paytm UPI  இலவசமாக செயல்படும் எனவும், பேடிஎம் வாலட் மற்றும்  வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தும்போது எந்த வித  கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது.


source https://news7tamil.live/upi-money-transaction-issue-paytm-notice-no-charges.html