28 3 23
லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகம்மது ஃபைசால் மீதான கொலை முயற்சி வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், 2 மாதங்கள் கடந்தும் அவரின் தகுதி நீக்க அறிவிப்பு திரும்ப பெறப்படவில்லை.
இதற்கு எதிராக முகம்மது ஃபைசல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) பட்டியலிடப்பட்டு உள்ளது.
வழக்கு
பைசலின் கூற்றுப்படி, அவர் மீது ஜனவரி 5, 2016 அன்று ஆந்த்ரோத் தீவு காவல் நிலையத்தில் “பொய் வழக்கு” பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, அவர் 2019 இல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனவரி 11, 2023 அன்று, மறைந்த மத்திய அமைச்சர் பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலிஹை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஃபைசல் மற்றும் மூன்று பேருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கவரத்தியில் உள்ள அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஜனவரி 13 அன்று, லோக்சபா செயலகம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) இன் கீழ் பைசலின் தகுதி நீக்கத்தை அறிவித்தது.
இந்தச் சட்டத்தின்படிதான் சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியும் தனது எம்.பி. பதவியை இழந்தார்.
ஜனவரி 18 அன்று, செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான பைசல் மேல்முறையீடு கேரள உயர்நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், லட்சத்தீவு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜனவரி 25 அன்று, திட்டமிடப்பட்ட இடைத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கேரள உயர்நீதிமன்றம் பைசலுக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, லட்சத்தீவில் இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஜனவரி 30 அன்று, கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லட்சத்தீவு யூனியன் பிரதேசம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
. பிப்ரவரி 20 அன்று, நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்து மார்ச் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.
ஒரு புதிய மனுவில், ஜனவரி 13 தகுதி நீக்க அறிவிப்பை மக்களவை செயலகம் திரும்பப் பெறாததை எதிர்த்து பைசல் சவால் விடுத்துள்ளார்.
அதில், செயலகத்தின் செயலற்ற தன்மை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8 இன் கீழ் தீர்க்கப்பட்ட சட்டத்தை மீறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதன்படி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 389 இன் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தப்பட்டால், எம்.பி.யின் தகுதி நீக்கம் செயல்படாது.
லோக் பிரஹாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் (2018) மீதான தீர்ப்பில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி (CJI) தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
அதில், நீதிபதி ஏ.எம். கன்வில்கர் (ஓய்வு), மற்றும் (தற்போதைய தலைமை நீதிபதி) நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இருந்தனர்.
அந்தத் தீர்ப்பில், நீதிமன்றத்தால் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால், தண்டனையால் அளிக்கப்பட்ட தகுதி நீக்கம் திரும்ப பெறப்படும் என்று தெளிவுப்படுத்தினர்.
மேலும், “ஒரு முறை மேல்முறையீட்டு நிலுவையில் இருக்கும் போது தண்டனை நிறுத்தப்பட்டால், தண்டனையின் விளைவாக செயல்படும் தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்கவோ அல்லது நடைமுறையில் இருக்கவோ முடியாது” என்று தீர்ப்பு கூறியது.
source https://tamil.indianexpress.com/explained/why-lakshadweep-mp-mohammed-faizal-has-challenged-his-disqualification-in-the-supreme-court-621096/