சனி, 25 மார்ச், 2023

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

 இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிறைத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வழிவகுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிறைத் தண்டனை பெறும் எம்பி, எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அபா முரளிதரன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை பேசுவதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தடையாக உள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை முடக்குவதுபோல உள்ளது என்றும் மனுதாரர் அபா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

25 3 23

source https://news7tamil.live/opposition-to-the-representation-of-the-people-act-public-interest-petition-filed-in-the-supreme-court.html