ஞாயிறு, 26 மார்ச், 2023

வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால் அந்த அம்சங்களை மொத்தமாக சேர்த்து Invisible வகையில் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்தலாம்.

 வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பலர் பயன்படுத்துகின்றனர். நண்பர்கள், உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பி மகிழலாம். அதேசமயம் சிலரைத் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கும். தவிர்க்க வேண்டி இருக்கும். தவறான பேச்சு, தேவையற்ற மெசேஜ்களில் இருந்து விலகி நிற்க வேண்டி இருக்கும். சில சமயம் அது சொந்தரவாக கூட நீங்கள் கருதலாம். அந்தநேரங்களில் பிரைவசி தேவைப்படும். அந்தவகையில் வாட்ஸ்அப்பின் இந்த அம்சங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது யாருக்கும் தெரியாத வண்ணம் மறைத்து பயன்படுத்துவதாகும்.

Hide last seen and online status

நீங்கள் பிஸியாக இருப்பீர்கள், தக்க நேரத்தில் reply கொடுக்க முடியாது என்றால் உங்கள் last seen ஆப்ஷனை மறைத்து (Hide) வைப்பது உதவியாக இருக்கும். அதற்கு செட்டிங்க்ஸ் மெனு சென்று Privacy > Last seen and online செலக்ட் செய்ய வேண்டும். அதில் last seen to Nobody என தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் அதே பக்கத்தில் online status Hide செய்து வைக்கும் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் Hide செய்து வைத்துக் கொள்ளலாம்.

Turn off read receipts

வாட்ஸ்அப்பில் நிறைய பிரைவசி அம்சங்கள் உள்ளன. அதில் read receipts அம்சமும் ஒன்று. இதை செய்ய முதலில் செட்டிங்க்ஸ் மெனு சென்று Privacy > Read receipts switch off என்ற ஆப்ஷனை கிளிக் செய்து read receipts ஆப் செய்து கொள்ளலாம்.

Limit status updates

Limit status அம்சம் மூலம் உங்கள் ஸ்டேட்ஸ் ஸ்டோரியை யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கடந்த காலங்களில் இருந்தே பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் Invisible வகையில் பயன்படுத்தும் போது இதுவும் உதவியாக இருக்கும்.
“Only share with” கொடுத்து உங்கள் contacts செலக்ட் செய்து கொள்ளலாம்.

Hide profile photo, About

வாட்ஸ்அப் டி.பி எனப்படும் உங்கள் profile photo-வையும் மறைத்து வைக்கலாம். அதேபோல் உங்களைப் பற்றின தகவல்களை கொடுத்திருக்கும் About அம்சத்தையும் மறைத்து பயன்படுத்தலாம்