31 3 2023
கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் 3ம் அலையின் போது, தமிழ்நாட்டில் உருமாறிய ஓமைக்ரான் அதிமாக பரவியது. இந்நிலையில் சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் கொரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டது. இந்நிலை கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது பரவிரும் கொரோனா வைரஸ்-யின் பரவவல் வேகம் அதிகமாக இருக்கிறது. ஆனால் நோய் பாதிக்கு குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில், முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்நோயாளிகள், புற நோயாளிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/ma-subramanian-new-announcement-government-hospital-mask-must-624556/