21 3 23
தமிழகத்தில் தொடர்ந்து வரும் மர்ம காய்ச்சல் பற்றி அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “கடந்த வாரம், ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளரிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு சுற்றறிக்கை வரப்பட்டிருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில் படி, இந்திய முழுவதும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடக போன்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கிறது என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்திலும் கூட, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் தினந்தோறும் இரண்டு என்கிற அளவில், பாதிப்பே இல்லாத நிலை இருந்தது.
ஆனாலும் கடந்த 8-9 மாத காலமாக, கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இறப்பு என்பது, 1-2 அளவிலே மட்டும் இருந்தது. உயிரிழப்பு என்பது கடந்த 8-9 மாத காலமாக இல்லாமல் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்திய முழுவதும் அதிகரித்து வரும் இந்த கொரோனா வகை என்பது, XBB, BA2 என்று உருமாற்றம் பெற்ற வைரஸ் பாதிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்பு இல்லாத நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்லவேண்டிய சூழலும் இல்லாத நிலையும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இரண்டரை மாதத்திற்கு முன்னால், 2 என்கின்ற அளவில் இருந்த கொரோனா எண்ணிக்கை நேற்றைக்கு 76 என்கிற அளவில் உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக இந்தியா முழுமைக்கும், 200க்கும் கீழே இருந்த எண்ணிக்கை, நேற்று 1000த்தை தாண்டி இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல உலகில் பல்வேறு நாடுகளிலும் இந்த தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக துபாய், சிங்கப்பூர் போன்ற வணிக ரீதியான நாடுகளில் இருந்து வருகின்ற மக்களிடத்தில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, கடந்த பத்து நாட்களுக்கு முன்னால் வரை, இரண்டு மூணு நாட்களுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
எனவே, வருகின்ற மக்களுக்கு தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை சார்பில் உடனடியாக அவர்கள் அடுத்து தொடர வேண்டிய நடவடிக்கைகள் பற்றி
அறிவுறுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஏற்கனவே இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவியதையடுத்து, 1000 இடங்களில் சிறப்பு முகாம்கள் வைக்க முதல்வர் முடிவெடுத்தார். ஆனால், 1586 இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தினோம்”, என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/press-meet-about-corona-precautions-minister-ma-subramanian-617921/