சனி, 4 மார்ச், 2023

தமிழ்நாட்டில் காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கியுள்ளது பெருமைப்படக்கூடியது – எரிக் சோல்ஹைம்

 

மாவட்டங்களில் காலநிலை இயக்கம் தொடங்கப்படுவதுடன், காலநிலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு செயல்திட்டம் உருவாக்கப்படுகிறது என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறைச்செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்

தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறைச்செயலாளர் சுப்ரியா சாகு, உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை தலைமை விஞ்ஞானி செளமியா சாமிநாதன், பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோல்ஹைம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது எரிக் சோல்ஹைம் கூறுகையில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கியுள்ளது பெருமைப்படக்கூடிய ஒன்று. தமிழ்நாடு அழகான சிறந்த மாநிலம், சுற்றுலாத்துறை அதிகம் கவனம் பெற்று வருகிறது என்று தெரிவித்தார். காலநிலை மாற்றத் துறைச்செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவிக்கையில், “செயல்திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் காலநிலை இயக்கம் தொடங்கப்படுகிறது. காலநிலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு செயல்திட்டம் உருவாக்கப்படுகிறது 180 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. 8,000 டன் பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு சவாலானது என்று தெரிவித்தார்.


உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி செளமியா சாமிநாதன் கூறுகையில், வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகளை எப்படி தடுக்க முடியும் என்பதில் விழிப்புணர்வு தேவை குறித்து பேசப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்தால் வெற்றிகரமான சூழல் ஏற்படும். இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்ள துணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.


source https://news7tamil.live/the-climate-change-movement-has-begun-in-tamil-nadu-says-erik-solheim.html