வியாழன், 2 நவம்பர், 2023

ஹமாஸ் அறிவிப்பு எதிரொலி – காஸாவில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டினர்

 

போர் எதிரொலியாக, காஸாவில் இருந்து வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். 

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை தொடர்ந்தது. 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்தனர்.

வான்வழி, கடல்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.  இஸ்ரேல் – ஹமாஸ் போரில், காஸாவில் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்,  அதில் 3,320 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, வெளிநாட்டு பிணைக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டு மக்கள், எகிப்து நாட்டிற்கு ரபா வழியாக கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

source https://news7tamil.live/hamas-announcement-echoes-foreigners-fleeing-gaza-in-droves.html