வியாழன், 2 நவம்பர், 2023

இஸ்ரேல் உடனான உறவை துண்டித்தது பொலிவியா – காஸா மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தல்

 

இஸ்ரேல் ராணுவத்தின் போர் நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டுடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை தொடர்ந்தது. 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்தனர்.

வான்வழி, கடல்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.  இஸ்ரேல் – ஹமாஸ் போரில், காஸாவில் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்,  அதில் 3,320 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், இஸ்ரேலின் போர் நடவடிக்கை காரணமாக அந்நாட்டுடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது. காஸா மீதான ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாடுகளால் உறவை துண்டித்ததாக பொவிலியா தெரிவித்துள்ளது. மேலும், காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பொலிவியா அரசு, போர் நிறுத்தம் அறிவிக்கும்வரை இஸ்ரேலுடன் எந்த உறவும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.


source https://news7tamil.live/bolivia-cuts-ties-with-israel-demands-end-attack-on-gaza.html

Related Posts: