உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் உள்பட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பினை குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்தி பென் பட்டேல், உத்தரப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஜக்தீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பிகார் ஆளுநராக இருந்த லால்ஜி தாண்டன், மத்தியப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பையாசும், பிகார் மாநில ஆளுநராக பாகு சவ்ஹானும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகாலாந்து ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
credit ns7.tv