புதன், 31 ஜனவரி, 2024
உறவுகளும்! பிரிவுகளும்!
வல்லோனின் வல்லமையை உணர்ந்து கொள்வோம்!
இஸ்லாமியர்களின் இன்றைய நிலை!
துன்பங்களிலிருந்து விடுபட என்ன வழி?
ஐவேளை கடமையும் அலட்சியப்படுத்தும் முஸ்லிம்களும்!
இஸ்லாம் உறவுகளை நேசிக்க சொல்கிறது ஆனால் சிலர் உறவை முறித்துவிட்டு செல்கிறார்கள் இவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
வாராந்திர கேள்வி பதில் - 24.01.2024
யூடியூப்களில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் சம்பாதிக்கும் வருமானம் ஹலாலா? ஹராமா?
பயனளிக்குமா பச்சோந்தி தாவல்?
ஏலியன் குறித்த வாதங்கள் உண்மைகளா? உளறல்களா?
சங்கியா? இல்லையா?
கேள்விக்குறியாக்கப்படும் அரசியல் சாசனம்
காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினமான இன்று இந்தியா முழுவதும் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனவரி 30 ஆம் தேதியை மத நல்லிணக்க நாளாக கடைபிடித்து மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை மத நல்லிணக்க நாளாக அனுசரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் “மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்கிற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டினர்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
” காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, இன்று நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்தை காக்கும் கவசமாக இருக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம். மதவெறிக்கு_முற்றுப்புள்ளி வைப்போம்.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/bigotry-which-shot-dead-gandhijis-is-pointing-its-gun-at-religious-harmony-in-the-country-minister-udayanidhi-stalin.html#google_vignette
சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயக கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!
30 01 2024
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை வெளிப்படையாக கொலை செய்துள்ளதாக காங்கிரஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இந்த ஆண்டு மே 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.
இதனிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹின் நோய்வாய்ப் பட்டுள்ளதால், தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பிப்.6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் தேர்தல் தேதியை ஜனவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 6-ம் தேதிக்கு சண்டிகர் துணை ஆணையர் ஒத்திவைத்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது கடந்த ஜன. 24-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜனவரி 30-ம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜன. 30) காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகரில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “சண்டிகரில் மேயர் தேர்தல் நடந்தது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனால் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. மொத்தம் 36 இடங்களில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணிக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரியை பாஜகவினர் நியமித்தனர்.
இந்த வீடியோவில், தேர்தல் அதிகாரி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்துள்ளார். இதன் மூலம் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை வெளிப்படையாக கொலை செய்துள்ளது.” என பதிவிட்டுள்ளது.
source https://news7tamil.live/bjp-has-killed-democracy-in-chandigarh-mayoral-election-congress-released-video.html
மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து மருத்துவமனையில் தாக்குதல் – இஸ்ரேல் ராணுவம் அட்டூழியம்.!
31 01 2024
மருத்துவர், செவிலியர் போல் வேடமணிந்து இப்னு சினா மருத்துவமனையில் தாக்குதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய காணொலிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்நிலையில், காசாமுனையில் உள்ள பணைய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணைய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில்,காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 165 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படையினர் மருத்துவர், செவிலியர் போல வேடமணிந்து சென்று தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் குழுவினர் சிகிச்சை பெற்றுவருவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம். இதில் முகமது ஜலாம் நிஹ் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் மருத்துவர் மற்றும் செவிலியர் போன்று வேடமணிந்து மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களை சந்தித்து வருகின்றன
source https://news7tamil.live/attacking-the-hospital-pretending-to-be-a-doctor-and-nurse-israeli-army-is-an-atrocity.html
ஸ்பெயின் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
ஸ்பெயின் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.! 31 01 2024
ஸ்பெயின் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார்.
தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் “ஸ்பெயின் நாட்டின் தலைநகரான ‘மாத்ரித்’ நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிகமுக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன். எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.
கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். இந்த நாட்டை இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. அழகான நிலப்பரப்பும். துடிப்பான கலாச்சாரமும் இணையப் பெற்று, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.
பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்றே, வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.
ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது. காளை அடக்குதல் விளையாட்டு, ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. எங்கள் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக, உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனைப் பார்க்கலாம்.
இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.
மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது. தங்கள் முதலீடுகளை பன்மடங்கு 130க்கும் மேற்பட்ட “ஃபார்ச்சூன் 500” நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கு தொழில்களைத் துவங்க வரும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். இவை குறித்து தொழில்துறை அமைச்சரும், அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுக் கொள்கின்றேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிடுகிறார். அந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படக்கூடிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். இந்த ஆய்வின்போது தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
பள்ளி மாணவி ஹிஜாப் அணிய எம்.எல்.ஏ எதிர்ப்பு: முதல்வருடன் பேசுவதாக அமைச்சர் தகவல்
பள்ளி மாணவி ஹிஜாப் அணிய எம்.எல்.ஏ எதிர்ப்பு: முதல்வருடன் பேசுவதாக அமைச்சர் தகவல் 30 01 2024
ராஜஸ்தான் மாநிலத்தின் ஹவா மஹாலைச் சேர்ந்தவர் பால்முகுந்த் ஆச்சார்யா. பாஜகவின் எம்.எல்.ஏ-வான இவர், நேற்று (திங்கள்கிழமை) காலை, ஜெய்ப்பூரில் உள்ள கங்காபோல் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென விசிட் சென்றுள்ளார். அங்கிருந்து வெளியாகியுள்ள வெளிவந்த ஒரு வீடியோவில், அவர் பள்ளி நிர்வாகியை அழைத்து ஹிஜாப் அணிந்திருந்த சில மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியது பதிவாகியுள்ளது.
மற்றொரு வீடியோவில், இந்து மற்றும் முஸ்லீம் குழந்தைகள் கலந்திருக்கும் பள்ளியில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை நிறுத்துமாறு பள்ளி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதேபோல் மற்றொரு வீடியோவில், அவர் மேடையில் "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "சரஸ்வதி மாதா கி ஜெய்" என்ற கோஷங்களை எழுப்பி மாணவர்களை வழிநடத்துகிறார். சில பெண்கள் வேண்டாம் என்று சொல்லி அதை மறுத்துள்ளனர். ஆனாலும் அவர் அவர் பள்ளி மாணவர்களிடம் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடுவது பதிவாகியுள்ளது..
இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து முஸ்லீம் மாணவர்கள் சுபாஷ் சவுக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ "பள்ளிகளில் சூழலைக் கெடுப்பதை" நிறுத்த வேண்டும் என்றும் அவரது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். "அவர் காவி அங்கி அணிந்து சட்டசபைக்கு செல்கிறார்" "அப்படியானால் ஹிஜாப் மீது ஏன் இந்த பாகுபாடு? என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்.எல்.ஏ-வின் வருகைக்குப் பிறகு வெளியான மற்றொரு வீடியோவில், ஆச்சார்யா, அரசுப் பள்ளிகளில் இரண்டு வெவ்வேறு ஆடைகளுக்கு ஏற்பாடு உள்ளதா என்று முதல்வர் மற்றும் மற்றவர்களிடம் கேட்டதாகவும், அவர்கள் இல்லை என்று பதில் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு, முஸ்லிம் மற்றும் இந்து மாணவர்கள் காவல்துறையில் வெவ்வேறு புகார்களை அளித்தனர்.
இந்த புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூர் வடக்கு காவல் துணை ஆணையர் ராஷி டோக்ரா தெரிவித்தார். மேலும் "இரு குழுக்களும் பள்ளியில் தங்கள் மத நடைமுறைகளைப் பின்பற்ற அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் குற்றம் சாட்டியுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜஸ்தான் மாநிலத்தின், விவசாய இலாகாவை வகிக்கும் கேபினட் அமைச்சர் மீனா பேசுகையில், “முஸ்லீம் சமூகத்தில் உள்ள மதவெறி மற்றும் காங்கிரஸின் திருப்தி அரசியலால், சமூகம் முன்னேற முடியவில்லை. அவர்களுக்கு கல்வியில் குறைபாடு உள்ளது, எனவே கல்விப் பிரச்சாரம் இருக்க வேண்டும், முஸ்லிம் சமூகம் முற்போக்கான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவர்களின் சிந்தனை குற்றத்தை நோக்கியே அதிகமாக உள்ளது.
பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு பின்பற்றப்பட வேண்டும்,'' “ஒரு பெண் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் சென்றால், பள்ளியில் ஒழுக்கம் இருக்காது, மாணவர்கள் எந்த உடையில் வேண்டுமானாலும் பள்ளிக்குச் செல்வார்கள். ஆடை விதியை பின்பற்ற வேண்டும். ஹிஜாப் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது, எனவே எந்த சூழ்நிலையிலும் பள்ளிகளில் அனுமதிக்க முடியாது, “எங்கள் எம்எல்ஏ இந்த பிரச்சினையை எழுப்பியதால்” இது குறித்து முதல்வரிடம் பேசுவேன்
ஹிஜாப் அணிவது தவறு. காவல்துறையில், பள்ளிகளில் ஆடைக் கட்டுப்பாடு உள்ளது. இல்லாவிட்டால் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் குர்தா பைஜாமா, வேட்டி குர்தா, சூட் பூட் அணிவார். அரசு பள்ளிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் ஹிஜாப் தடை செய்யப்பட வேண்டும் என்று கேபினட் அமைச்சர் கிரோடி லால் மீனா தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த ஜெய்ப்பூரின் ஆதர்ஷ் நகரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரஃபீக் கான், “ஆச்சார்யா மலிவான விளம்பரத்திற்காகவும், தான் ட்ரெண்டிங்கில் இருந்ந வேண்டும் என்பதற்காகவும் இதை செய்கிறார். அவர் ஒரு அரசியல் கட்சியின் அனைத்து சாதிகள், மதங்கள் மற்றும் அனைத்து தொகுதிகளும்." எம்எல்ஏ அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
"ராஜஸ்தான் சமூக நல்லிணக்கம் க்கு பெயர் பெற்றது, இது போன்ற விஷயங்கள் இங்கே வேலை செய்யாது, பொறுத்துக்கொள்ளப்படாது," ஆச்சார்யா காவி நிறத்தில் மூழ்கியிருக்கிறார். மற்றும் "மாணவர்களை அப்படியே உருவாக ஒரு மத முழக்கம் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். 2021 டிசம்பரில் கர்நாடகாவிலும் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை வெடித்தது, உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஆறு கல்லூரி மாணவர்களுக்கு தலையை மறைத்ததால் நுழைவு மறுக்கப்பட்டது.
அன்றைய பாஜக அரசும் பல்கலைக் கழகங்கள் ஆடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டது. அந்த ஆறு மாணவர்களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினர், அது மாநில அரசின் உத்தரவை உறுதி செய்தது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஹிஜாப் அணிவதற்கு எந்த தடையும் இல்லை என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மதச்சார்பின்மைக்கு சாவு மணி
Ayodhya Temple | CPIM: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு நடைபெற்றது. 3 நாள் நடந்த இக்கூட்டம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவுபெற்றது. இந்நிலையில், இந்த கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் சி.பி.ஐ.எம் கட்சி, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா, அரசு, நிர்வாகம் மற்றும் அரசியலில் இருந்து மதத்தைப் பிரிப்பதாக வரையறுக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கு சாவு மணியை அடித்துள்ளது என்று கடுமையாக சாடியுள்ளது.
மேலும், ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பமான மத நம்பிக்கைகளை மதிக்கும் அதே வேளையில், ஜனவரி 22ல் நடந்த யோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சி அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டது என்றும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, இப்போது "குளிர்சாதனக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதை" இது உணர்த்துகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சி.பி.ஐ.எம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 22, 2024 அன்று அயோத்தியில் நடைபெற்ற கோவில் திறப்பு விழா மதச்சார்பின்மைக்கு சாவு மணியை அடித்துவிட்டது. முழு நிகழ்ச்சியும் பிரதமர், உ.பி., முதல்வர், உ.பி., கவர்னர் மற்றும் முழு அரசு நிர்வாகத்தையும் நேரடியாக உள்ளடக்கிய, அரசு நிதியுதவியுடன் கூடிய நிகழ்ச்சியாக இருந்தது.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் இருவரும் பிரதமருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர். அவர் 'உறுதியை மீட்டுக்கொண்டார் என்றும், இந்தியாவின் நாகரீகப் பாதையில் விதியுடன் முயற்சி செய்துள்ளார்' எனப் பலவிதங்களில் அவரைப் பாராட்டினர். முழு விழாவும் அடிப்படைக் கொள்கையை நேரடியாக மீறுவதாகும். உச்ச நீதிமன்றத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பின் கீழ் அரசுக்கு எந்த மத சார்பும் அல்லது விருப்பமும் இருக்கக்கூடாது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர் நாடு தழுவிய அளவில் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நேரடி ஒளிபரப்பின் பொதுக் காட்சிகள் பல்வேறு இடங்களில் மாபெரும் திரைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் மூடப்பட்டன. ஊழியர்கள் பங்கேற்பதற்காக அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் பிற்பகல் 2.30 மணி வரை மூடப்பட்டன.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து கோவிலுக்கு மக்களைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது மார்ச் 2024 வரை, அதாவது தேர்தலுக்கு முந்தைய நாள் வரை இடைவெளியில் இருக்கும். அயோத்தியைத் தவிர அனைத்து மதத் தலங்களின் தன்மையும் அந்தஸ்தும் ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்ததைப் போலவே இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 - இப்போது குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்படும் என்பதையும் இந்நிகழ்வு உணர்த்துகிறது.
காசி மற்றும் மதுராவில் உள்ள விவகாரங்கள் மீண்டும் நீதித்துறை அனுசரணையுடன் வெளிவந்துள்ளன. அயோத்தி தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்திற்கு மோடி நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பமான மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதே அதன் கொள்கையாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு தனிநபரின் நம்பிக்கையையும் பின்பற்றுவதற்கான உரிமையை கட்சி உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. ஆனால் அதே சமயம் மக்களின் மத நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும், அரசியல் ஆதாயத்துக்காகவும் மதத்தை அரசுடன் இணைப்பதற்கும் ஒரு கருவியாக மாற்றும் முயற்சிகளை அது தொடர்ந்து எதிர்க்கிறது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/ayodhya-temple-inauguration-sounded-death-knell-for-secularism-cpim-tamil-news-2407785
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ புதிய திட்டம்; ஜன. 31 முதல் நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ புதிய திட்டம்; ஜன. 31 முதல் நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு 30 01 2024
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை (ஜன. 31) முதல் நடைமுறைக்கு வருகிறது. பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி அவற்றை திறம்பட செயல்படுத்தி முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில்,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
இல்லம் தேடி கல்வித் திட்டம்
மக்களைத் தேடி மருத்துவம்
நான் முதல்வன்
இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48
புதுமைப் பெண்
முதலமைச்சரின் காலை உணவு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர்
போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களுக்காக தீட்டப்பட்டு அவை அனைத்தும் கடைக்கோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டினை முன்னணி மாநிலமாக தலை நிமிரச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படுத்தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 23.11.2023 அன்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இத்திட்டம் நாளை 31.01.2024 புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் சென்னை மாவட்டம் நீங்களாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல் மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்
அரசின் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீளித்து எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/ungalaith-thedi-ungal-ooril-new-scheme-starts-on-january-31st-tn-government-announced-2407984
பெட்ரோல், டீசல் விலை 31 01 2024
சென்னையில் 619-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய், 30 ஜனவரி, 2024
கற்ற கல்வியின் மூலமாக முன்னுக்கு வாருங்கள்
கற்ற கல்வியின் மூலமாக முன்னுக்கு வாருங்கள்.
TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?
குரூப் 7, 8 பற்றி தெரியுமா?
*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் -
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குரூப் – 1,
குரூப் – 2,
குரூப் – 3,
குரூப் – 4,
குரூப் – 5,
குரூப் – 6,
குரூப் – 7,
குரூப் – 8
குரூப் – 1 சேவைகள்
(Group-I)
1)துணை கலெக்டர்
(Deputy Collector)
2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police)
3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை
(District Registrar, Registration Department)
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து)
4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector)
5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)
6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர்
(Div. Officer in Fire and Rescue Services)
7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner)
8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)
குரூப் – 1A சேவைகள்
(Group-I A)
1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)
குரூப் – 1B சேவைகள்
(Group-I B)
1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)
குரூப் – 1C சேவைகள்
(Group-I C)
1)மாவட்ட கல்வி அலுவலர் DEO
(District Educational Officer)
2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2
குரூப் – 2 சேவைகள்
(நேர்முகத்தேர்வு பதவிகள்)
(Group-II)
1)துணை வணிக வரி அதிகாரி
2)நகராட்சி ஆணையர், தரம் -2
3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்)
4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்)
5)துணை பதிவாளர்,
தரம் -2
6)தொழிலாளர் உதவி ஆய்வாளர்
7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை)
8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)
9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை)
10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு
உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர்
11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை
12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு
நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை
தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர்
14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு
15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்
16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை,
17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை
19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிடர் மற்றும் ....
பழங்குடியினர் நலத்துறை தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர்
இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை
உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை
உதவி ஜெயிலர், சிறைத்துறை.
வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில்
நிர்வாக அதிகாரி,
தரம் -2 டி.வி.ஐ.சியில்
சிறப்பு உதவியாளர்
கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில்
சிறப்பு கிளை உதவியாளர்.
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு
தொழிலாளர் உதவி ஆய்வாளர்
தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.
குரூப் – 2A சேவைகள் (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A)
கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர்
ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில்
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர)
இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை
தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை)
தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை)
தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு
தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம்
தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை
உதவியாளர் பல்வேறு துறைகள்
செயலகத் துறையில் உதவி (நிதித்துறை)
தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர்
தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம்
திட்டமிடல் இளைய உதவியாளர்
வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை)
சட்டத்துறையில் உதவியாளர்
தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3
குரூப் – 3 சேவைகள்
(Group-III)
தீயணைப்பு நிலைய அதிகாரி
குரூப் – 3A சேவைகள்
(Group-III A)
கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர்
தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2
குரூப் – 4 சேவைகள்
(Group-IV)
ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத)
பில் கலெக்டர்
தட்டச்சு செய்பவர்
ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3
கள ஆய்வாளர் 6. வரைவாளர்
குரூப் – 5A சேவைகள்
(Group-V A)
செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
குரூப் – 6 சேவைகள்
(Group-VI)
வன பயிற்சியாளர்
குரூப் – 7A சேவைகள்
(Group-VII A)
நிர்வாக அதிகாரி,
தரம் -1
குரூப் – 7B சேவைகள்
(Group-VII B)
நிர்வாக அதிகாரி,
தரம் – 3
குரூப் – 8 சேவைகள்
(Group-VIII)
நிர்வாக அதிகாரி,