புதன், 24 ஜனவரி, 2024

பா.ரஞ்சித் விமர்சனம் : எதிர்த்து தெரிவித்த பிரபலங்கள்

 

Ranjith Rajini

ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது குறித்து பா ரஞ்சித் கருத்து

அயோத்தி ராமர் கோவில் திறப்பு பிற்போக்கு அரசியலின் ஒரு பகுதியாக இருநதது என்று தெரிவித்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித் நாட்டின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நேற்று முன்தினம் (ஜனவரி 22) பிரம்மாண்டமாக நடைபெற்றது. சினிமா நட்சத்திரங்கள் பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில்பிரதமர் மோடி தலைமையேற்று ராமர் கோவிலை திறந்து வைத்தார்இதனைத் தொடர்ந்து நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக ராமர் கோவில் திறக்கப்பட்டடுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க : Pa Ranjith comments on Rajinikanth attending Ram temple consecration: ‘We have to question the politics behind his statement’

இதனிடையே ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்ற சினிமா நட்சத்திரங்கள் பலரும்கோவில் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில்நடிகர் ரஜினிகாந்த்500 ஆண்டுக்கான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்றும்,

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி

5 தசாப்தங்களுக்கான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்றும் இசையமைப்பாளர் இளையராஜா இந்த ராமர் கோவில் பிரதமர் மோடியை தவிர வேறு யாராலும் முடியாது என்று கண்ணீர்மல்க தெரிவித்திருந்தார்.

நடிகர்களின் இந்த கருத்து வலைதளங்களில் பெரும் வைரலாக பரவிய நிலையில்இதற்கு நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குனரும் தயாரிப்பளருமான பா.ரஞ்சித்ராமர் கோவில் திறப்பு பிற்போக்கு அரசியலின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார். இது இந்தியர்களால் எதிர்க்கப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலம் "ஆபத்தில்" இருக்கிறது. அதைப் பாதுகாக்கமக்களின் மனதில் இருந்து "வகுப்புக் கருத்துக்களை அகற்ற" கலை ஊடகத்தைப் பயன்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தனது தயாரிப்பான புளூ ஸ்டார் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் “இன்று வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்படும் நிலை வந்துவிட்டது. இந்தியா மிகவும் ஆபத்தான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் நாம் எப்படிப்பட்ட இந்தியாவாக வாழப் போகிறோம் என்ற அச்சம் எங்களுக்குள் உள்ளது.

நமக்குக் கற்பிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான கருத்துக்களை அழிக்கவும்வகுப்புவாதக் கருத்துக்களை நம் மனதில் இருந்து அகற்றவும்” “அத்தகைய எதிர்காலத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். இந்தியா முழுவதும் மக்கள் இதையே செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ரஜினிகாந்த் “ராமர் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம். ஆனால் இது 500 ஆண்டுகள் பழமையான பிரச்சனைக்கு முடிவு கட்டுவதாக அவர் கூறினார். இதன் பின்னணியில் உள்ள அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டும். அவர் சொல்வது சரியா தவறா என்பதைத் தாண்டி அவருடைய கருத்தைப் பற்றிய விமர்சனம் எனக்கு உண்டு” என தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ராம் சரண்அமிதாப் பச்சன்ரன்பீர் கபூர்ஆலியா பட் முதல் ரஜினிகாந்த் மற்றும் ரக்ஷித் ஷெட்டி வரை பல நட்சத்திரங்கள் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்து கொண்டனர்.

Sushmita Sen shares Preamble of the Indian Constitution. (Pic: Sushmita/Instagram)

இதற்கிடையில்நடிகர்கள் பார்வதி திருவோத்துரீமா கல்லிங்கல்திவ்ய பிரபாராஜேஷ் மாதவன்கனி குஸ்ருதிஇயக்குநர்கள் ஜியோ பேபிஆஷிக் அபுகமல் கே.எம்குஞ்சிலா மாசில்லாமணிபாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்ட பல மலையாள திரையுலக பிரபலங்கள் அரச அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசியலமைப்பின் முகப்புரையின் படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/entertainment/pa-ranjith-comments-on-rajinikanth-attending-ram-temple-consecration-we-have-to-question-the-politics-behind-his-statement-2398399