ஞாயிறு, 28 ஜனவரி, 2024

8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட ஸ்டாலின்: விமான நிலையத்தில் பேட்டி

8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட ஸ்டாலின்: விமான நிலையத்தில் பேட்டி

 27 01 2024

அரசு முறை பயணமாக 8 நாட்கள் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் கூறுகையில்,

2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டார்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி 7-ந் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருந்தேன். இந்த பயணத்தில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய6100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதேபோல் 2023-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது 2000-க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 1342 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணவு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த 2 பயணங்கள் மூலமாக 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 7442 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் தான்,  பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவ தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட 2 மாதங்களில்ஜப்பான் நாட்டின் ஓம்ரான் நிறுவனத்தின தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுகட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் சிங்கப்பூர் நட்டை சேர்ந்த கேப்பிட்டாலா என்ற நிறுவனத்தின்ஐ.டி.பார்க் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படிலுலுப் நிறுவனம் கோயம்புத்தூரின் தங்களது திட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை போலவே ஸ்பெயின் நாட்டிலும்முதலீட்டார்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். ஸ்பெயின் நாட்டை சேர்ந்தமுதலீட்டாளர்கள்வணிக அமைப்புகள்தொழில்முணைவோர்இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடு தான் உகந்த மாநிலம் என்றுஅந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.

இந்த பயணத்தின் போது ரோஹாமற்றும் ஹெஸ்ட்ராம் உட்படசில பெருந்தோழில் நிறுவனங்களுடன்இன்வஸ்டென் என்னும் முதலீட்டு அமைப்புடன்நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட இருக்கிறேன். இந்த பயணத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துஅந்த நாடுகளில் இருந்து பெருமளவு முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன். எனவே உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடுஇந்த பயணம் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-press-meet-in-chennai-airport-before-spain-travel-2403728