வெளிநாட்டு மருத்துவர்கள் இந்தியாவில் சேவையாற்றுவதற்கான தற்காலிகமாக பதிவு உரிமத்தை பெறுவது தொடர்பான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் பயிலும் இந்தியர்கள், பல்வேறு மாநிலங்களில் மருத்துவ சேவையாற்ற சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம். இதற்கான வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ளது. இந்தியாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்து மருத்துவம் பயிலவும், மருத்துவ சேவையாற்றவும் தற்காலிக பதிவு நடைமுறையையும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கொண்டு வந்துள்ளது. அதன்படி வெளிநாட்டு மருத்துவர்கள், இந்தியாவில் மருத்துவம் பயிலவும், மருத்துவ சேவையாற்றவும் தற்காலிகமாக பதிவு உரிமம் பெறுவது அவசியமாகிறது.
இதற்கான வழிகாட்டுதல்கள் என்எம்சி இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்கள் என்எம்சி மருத்துவப் பதிவு மற்றும் நெறிசார் வாரியத்தின் உறுப்பினர் விஜயலட்சுமி நாக் வெளியிட்டுள்ளார்.
source https://news7tamil.live/temporary-registration-license-for-foreign-doctors.html#google_vignette