குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை தி.மு.க கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
எல்லா வருடமும் குடியசு தினம், சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழக்கமாக வழங்கப்படும். இந்த தேனீர் விருந்தில் மாநில முதல்வர், அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இதை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்க உள்ளனர்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, “ ஆளுநரை நாங்கள் புறக்கணிக்கவில்லை, ஆளுநரின் நடவடிக்கையை தான் புறக்கணிக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர் அரசியலைமைப்பின் சட்டத்தை சிதைக்கிறார். ” என்று அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/republic-day-tea-party-dmk-alliance-party-not-attending-2398563