ஞாயிறு, 28 ஜனவரி, 2024

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்…! ஆர்வமுடன் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள்…

 

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.  

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு
ஆண்டுதோறும் ரஷ்யா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், இலங்கை, சைபிரியா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளிலிருந்து பூநாரை, செங்கால் நாரை ,வரி தலைவாத்து, ஊசிவால் சிரவி,
40க்கும் மேற்பட்ட உள்ளான் வகை பறவைகள், கடல் ஆலா, கடல்காகம் உள்ளிட்ட 294
வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு 10
லட்சத்திற்கு மேல் பறவைகள் வந்து குவிந்துள்ளது.

இந்நிலையில், பறவைகளை கணக்கெடுக்கும் பணி இன்று காலை தொடங்கியது.
பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள்,
பேராசிரியர்கள் என 60 பேர் 12 வழி தடத்தில் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு
பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறவைகள் கணக்கெடுப்பு முடிவில் வெளிநாடுகளிலிருந்து எத்தனை வகையான பறவைகள் வந்துள்ளது என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


source https://news7tamil.live/bird-survey-work-has-started-in-kodiakarai-sanctuary-college-students-enthusiastically-participated.html