திங்கள், 22 ஜனவரி, 2024

ஒரே நாடு, ஒரே தேர்தல்''..

 Ramnath Govind

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல்’ முடிவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு நடத்திய சர்வேயில்பெறப்பட்ட 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கருத்துக்களில்பெரும்பாலானவை இந்த யோசனைக்கு ஆதரவாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாடுஒரே தேர்தல்’ தொடர்பான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மூன்றாவது கூட்டம் நடத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் படிஜனவரி 15 ஆம் தேதி வரை ஒரே நாடுஒரே தேர்தல்’ தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.  

அதன்படி ஒட்டுமொத்தமாக 20,972 கருத்துக்கள் பெறப்பட்டனஅவற்றில் 81% ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான  யோசனையை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், 46 அரசியல் கட்சிகளிடம் இருந்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்ட நிலையில்இதுவரை 17 அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளும் கமிட்டியால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சகம் கூறியது.

கடந்த வாரம்முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ஓபி ராவத்சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிடெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி ரோகினி ஆகியோரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தினார். இதேபோல் புகழ்பெற்ற நீதிபதிகள்உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள்முன்னாள் சிஇசிகள் (CEC), இந்திய பார் கவுன்சில் தலைவர்கள் மற்றும் தொழில் அமைப்புகளான FICCI, ASSOCHAM மற்றும் CII ஆகியோருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சகத்தால் செப்டம்பரில் அமைக்கப்பட்ட குழுஅதன் முதல் கூட்டத்தை அதே மாதத்தில் நடத்தியதுஅதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இரண்டாவது கூட்டத்தை நடத்தியது. அதன் விதிமுறைகளின்படி, “மக்கள் சபை (லோக்சபா)மாநில சட்டமன்றங்கள்நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/govt-81-per-cent-responses-to-ram-nath-kovind-led-panel-in-favour-of-simultaneous-polls-2395437

Related Posts: