புதன், 24 ஜனவரி, 2024

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் இன்று திறப்பு: மாடுபிடி வீரர்களுக்கு வியக்க வைக்கும் பரிசுகள் வழங்க திட்டம்

 

உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கை, இன்று மதுரையில் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா  இன்று மதுரையில் நடைபெறுகிறது. 61 கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்பில் மதுரை அலங்காநல்லூர்  கீழக்கரை கிராமத்தில் கலைஞர்  நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு கலைஞர் 

நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்வையோடி அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. முதல் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி  வீரர்களும் பங்கேற்கின்றனர். முதலிடத்தை பிடிக்கும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு தார் ஜீப் வழங்கப்படுகிறது. 2ம் பரிசு பெரும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு  தலா ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றிபெறும், காளைகள் மற்றும் வீரர்களுக்கு  தங்ககாசு, வெள்ளிக்காசு வழங்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டு வருகிறார்கள்.  

source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-to-open-kalaignar-centenary-aeruthazhuvuthal-2398365