பாரத் ஜோடோ நீதி யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கும் அசாம் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, லோக்சபா தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அசாம் காவல்துறை கைது செய்யும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதன்கிழமை தெரிவித்தார்.
புதன்கிழமை, அஸ்ஸாம் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஜி.பி சிங், இந்த வழக்கு மாநில சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், "முழுமையான மற்றும் ஆழமான விசாரணைக்காக" சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
“லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அவரைக் கைது செய்வோம், இப்போது அதைச் செய்தால் அது மிகவும் அரசியலாக்கப்படும். SIT இப்போது அதன் விசாரணையை மேற்கொள்ளும்... நேற்று காங்கிரஸ் தலைவர்கள் கும்பல் எப்படி தடைகளை உடைக்க தூண்டினார்கள் என்பதில் ஒரு பெரிய சம்பவம் நடந்திருக்கலாம். லோக்சபா தேர்தலுக்கு முன், நாங்கள் அதிகம் செய்ய மாட்டோம், ஏனென்றால் அஸ்ஸாமில் இருந்து எப்படியும் வெற்றி பெறுவோம், இங்கு அதிக அரசியல் சத்தம் போடுவதில் அர்த்தமில்லை. மாநிலம் அமைதியாக இருந்தால் நல்லது,” என்று புதன்கிழமை ஒரு நிகழ்ச்சியின்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
செவ்வாய் கிழமை நடந்த யாத்திரை அஸ்ஸாமில் ஆறாவது நாளாகும், அப்போது யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கும் அரசு எந்திரத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. செவ்வாய்கிழமை நடைபெறவிருந்த யாத்திரைக்கு குவஹாத்தி நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் இருந்து நகருக்குள் நுழையும் சாலையில் அவர்கள் தடுப்புகள் மற்றும் காவல்துறையினரை எதிர்கொண்டபோது, பங்கேற்பாளர்கள் தடையை உடைத்து, பாதுகாப்புப் பணியாளர்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். யாத்திரை இறுதியில் நெடுஞ்சாலையில் தொடர்ந்தது மற்றும் நகரத்திற்குள் நுழையவில்லை.
அன்றைய நாளின் பிற்பகுதியில், கிரிமினல் சதி, சட்டவிரோதமாக கூட்டம், கலவரம், பொது வழியைத் தடுத்தல், தாக்குதல் அல்லது குற்றச் செயல்கள் போன்றவற்றின் கீழ், பொது ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி, ஒரு பொது ஊழியருக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் சொத்து சேதம்ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் தானாக முன்வந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் என்று "தெரியாதவர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ராகுல் காந்தி, ஜிதேந்தர் சிங், கே சி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ஸ்ரீனிவாஸ் பி.வி, கன்ஹய்யா குமார், கவுரவ் கோகோய், தேபப்ரதா சைகியா, பூபென் போரா, ஜாகிர் ஹுசைன் சிக்தர் மற்றும் ராமன் குமார் சர்மா ஆகியோர் யாத்திரை மேகாலயாவிலிருந்து அஸ்ஸாமிற்குள் நுழையும் போது தலைமை தாங்கியவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
”காங்கிரஸ் மூத்த தலைவர்களால் தூண்டிவிடப்பட்டு, வழிநடத்தப்பட்டு பங்கேற்ற கூட்டம், காவல்துறையால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து GS சாலையை நோக்கிப் பாதையை வலுக்கட்டாயமாக மாற்றியது மற்றும் சட்டப்பூர்வமான கடமையைச் செய்த காவலர்களைத் தாக்கியது. காவல்துறை காங்கிரஸ் தலைவர்களையும் கூட்டத்தினரையும் சம்மதிக்க வைக்க முயன்றாலும்... தலைவர்கள் அப்பட்டமாக மறுத்து, தடைகளை உடைத்து வழியை மாற்றுமாறு மக்களைத் தூண்டிவிட்டனர்” என்று FIR கூறுகிறது.
இச்சம்பவத்தில் 5 போலீசார் காயமடைந்ததாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை, காங்கிரஸ் தனது யாத்திரையை லோயர் அஸ்ஸாம் மாவட்டங்களான பார்பெட்டா அட் துப்ரி வழியாகத் தொடர்ந்தது. “என் மீது உங்களால் முடிந்த அளவு வழக்குகளை பதிவு செய்யுங்கள். பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ்.,ஸால் என்னை மிரட்ட முடியாது” என்று புதன்கிழமை பர்பேட்டாவில் ஒரு பொது உரையின் போது ராகுல் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/wont-arrest-rahul-gandhi-now-will-wait-till-after-lok-sabha-elections-assam-cm-himanta-2399813