திங்கள், 22 ஜனவரி, 2024

“உண்மைக்குப் புறம்பான செய்தியை மத்திய அமைச்சர் பரப்புவது வருத்தமளிக்கிறது” – அமைச்சர் சேகர்பாபு!

 

21 1 24

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அன்னதானம் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “அயோத்தியில் நாளை நடைபெற உள்ள ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை” என கூறியுள்ளார்.


 இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள பதிவில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

source https://news7tamil.live/nirmala-sitharaman-ministersekarbaburamtemple-tamilnadu-templetn.html

Related Posts:

  • அம்மா திட்டத்தின் அம்மா  திட்டத்தின் கீழ், ஒவ்வரு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏராளமாக விரைவு  பணிகள் நடைபெற்றது. குடும்ப அட்டையில்  பெயர் இணைதல் … Read More
  • பாலியல் வன்கொடுமை உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்........குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள் ...சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெய… Read More
  • RSS தீவிரவாத இயக்  தயவு செய்து எந்த கமெண்டும் வேண்டாம். ஷேர் செய்யுங்கள் முடிந்தஅளவுநண்பர்கள், உறவினர், அரசாங்க உயர்அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்துறை அதிகார… Read More
  • வெகுவாக பரவிய கோவில்களை இடித்து இஸ்லாமை இந்தியாவில் பரப்ப வேண்டிய சூழ்நிலை முகலாய மன்னர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை, இந்தியாவில் வெகுவாக பரவிய இஸ்லாமை கண்டு பொ… Read More
  • கனமான மலை Photograph - RS Suhaib முபட்டி - 30/05/2013 மாலை 4.15 மணி முதல் - 4.50 வரை - கனமான மலை - கொட்டி தீர்த்தது - சுமார் 4C ,மழை பதிவானது.  வெப்பத்தி… Read More