மக்களவைத் தேர்தலில் திமுக – அதிமுக நேருக்கு நேராக 18 தொகுதிகளில் மோதுகின்னறன.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
தமிழ்நாட்டில் திமுக தலைமை வகிக்கும் இந்தியா கூட்டணியில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதே போல், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும் , எஸ்டிபிஐ கட்சிக்கு 1 தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று (மார்ச் – 20 ) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவின் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் – 21 ) 17 பேர் கொண்ட அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதையடுத்து, வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக – திமுக கட்சிகள் நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வருமாறு:
1) தென் சென்னை
தமிழ்ச்சி தங்கபாண்டியன் – திமுக
ஜெ.ஜெயவர்தன் – அதிமுக
2) வட சென்னை
கலாநிதி வீராசாமி – திமுக
ராயபுரம் மனோ – அதிமுக
3) ஸ்ரீபெரும்புதூர்
டி ஆர் பாலு – திமுக
பிரேம் குமார் – அதிமுக
4) காஞ்சிபுரம் (தனி)
செல்வம் – திமுக
ராஜசேகர் – அதிமுக
5) அரக்கோணம்
ஜெகத்ரட்சகன் – திமுக
A.L.விஜயன் – அதிமுக
6) வேலூர்
கதிர் ஆனந்த் – திமுக
பசுபதி – அதிமுக
7) தருமபுரி
அ.மணி – திமுக
டாக்டர் அசோகன் – அதிமுக
8) திருவண்ணாமலை
சி என் அண்ணாதுரை – திமுக
எம் கலியபெருமாள் – அதிமுக
9) ஆரணி
தரணி வேந்தன் – திமுக
கஜேந்திரன் – அதிமுக
10) கள்ளக்குறிச்சி
மலையரசன் – திமுக
ரா. குமரகுரு – அதிமுக
11) சேலம்
செல்வ கணபதி – திமுக
P.விக்னேஷ் – அதிமுக
12) ஈரோடு
பிரகாஷ் – திமுக
ஆற்றல் அசோக்குமார் – அதிமுக
13) நீலகிரி (தனி)
ஆ ராசா – திமுக
லோகேஷ் தமிழ்ச்செல்வன் – அதிமுக
14) கோயம்புத்தூர்
கணபதி ராஜ்குமார் – திமுக
சிங்கை ராமச்சந்திரன் – அதிமுக
15) பொள்ளாச்சி
கே ஈஸ்வரசாமி – திமுக
அப்புசாமி என்ற கார்த்திகேயன் – அதிமுக
16) பெரம்பலூர்
அருண் நேரு – திமுக
சந்திரமோகன் – அதிமுக
17) தேனி
தங்கத் தமிழ்செல்வன் – திமுக
நாராயணசாமி – அதிமுக
18) தூத்துக்குடி
கனிமொழி கருணாநிதி – திமுக
சிவசாமி வேலுமணி – அதிமுக
source https://news7tamil.live/dmk-aiadmk-clash-in-18-constituencies.html