\
ஃபீஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது, வயல் வெளிகளிலும் நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என்று ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் இருவேல்பட்டு கிராமத்தில் கடந்த டிச.3-ம் தேதி ஆய்வுக்கு சென்றிருந்தார். அப்போது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அமைச்சர் பொன்முடி மீது யாரோ சிலர் சேற்றை வாரி வீசினர். தில் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோர் மீதும் சேறு பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தில் இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமர் என்ற ராமகிருஷ்ணன் மற்றும் பாஜக பெண் பிரமுகர் விஜயராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mud-flung-at-ponmudi-2-person-arrested-7779077