திங்கள், 2 டிசம்பர், 2024

திருவண்ணாமலை மண்சரிவு: இடிபாடுகளில் சிக்கிய 7 பேரின் நிலை என்ன?

 

landslide

மண்சரிவு: தொடரும் மீட்பு பணி

திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்  மீட்புப் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

3 வீடுகளில் இருந்த ஏழு பேரின் நிலை என்னவானது என தெரியாமல் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் மலை அடிவாரத்தில் உள்ள வ.உசி நகரில் திடீரென பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் சில வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதில் ஏழு பேரை காணவில்லை.

விழுப்புரத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட முயற்சித்தபோது மீண்டும் கன மழை பெய்ததால் தற்போது அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மண் சரிவாக மட்டுமல்லாமல் 14 அடி உயரப் பாறை ஒன்றும் உருண்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். ராஜ்குமார் என்பவரது வீட்டின் மேல் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் ஏழு பேர் இடிபாடுகள் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி மீனா, கௌதம், இனியா, தேவிகா, வினோதினி உட்பட ஏழு பேர் ஈடுபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், இன்று (டிசம்பர் 2 ) காலை மீட்பு பணி மீண்டும் தொடங்கியது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvannamalai-landslide-what-happened-to-7-members-in-tamil-7663993