/indian-express-tamil/media/media_files/2024/12/03/ofuoGiOybJ80qsun5qob.jpg)
ஃபீஞ்சல் புயல்; விவாதிக்க வேண்டும்
தமிழகத்தில் ஃபீஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவைக்கு தி.மு.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆம் தேதி புயலாக மாறியது. ஃபீஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்தப் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
மேலும் திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பல்வேறு ஊர்களில் மழை நீர் ஊர்களுக்கும் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்களவையில் திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில் ஃபீஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக எம்.பி., கனிமொழி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இடைக்கால நிவாரணமாக ரூ. 2000 கோடி வழங்குவது குறித்தும், ஒன்றிய குழுவை அனுப்புவது குறித்தும் விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவை என தமிழ்நாடு அரசு மதிப்பீடும் செய்துள்ளது.
அதுமட்டும் இன்றி மக்களவையை ஒத்திவைக்கவும் கனிமொழி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும். நிவாரணத்தை உடனடியாக வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
மேலும் ஃபீஞ்சல் புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் மற்றும் மக்களவையை ஒத்திவைக்க வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cyclone-fengal-must-be-talk-about-flood-in-tamil-7756060