சனி, 7 டிசம்பர், 2024

கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

 

ஆதவ் அர்ஜுனா Voice of Common என்ற அமைப்பின் சார்பில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அவருடைய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என பேசி உள்ளார் நூலை உருவாக்கியவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் அர்ஜுனா.

இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான அண்ணல் அம்பேத்கர் குறித்த தகவல்கள் இடம்பெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மேனாள் நீதிபதி சந்துரு, விகடன் குழும நிர்வாகிகள், விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலை உருவாக்கியவரும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா பேசினார்.

இந்நிலையில், அவரது கருத்து குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது,

“அம்பேத்கர் பற்றிய புத்தகம் வெளியிட்டது பெருமையளிக்கிறது. நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கொடுத்த அழுத்தம் என்பதை போன்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை. அழுத்தம் கொடுத்து இனங்கக்கூடிய அளவிற்கு விசிக பலவீனமானது இல்லை.
இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணம் இல்லை.

எங்கள் இருவரையும் வைத்து உறுதிபடுத்தாமலேயே அதிகாரப்பூர்வமாக அரசியல் சாயம் பூசியது யார், பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கிவிடுவார்கள் என்பதால் தான் நான் விழாவில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணியை வைத்து காய் நகர்த்தும் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததை போல வாய்ப்பை தர நான் விரும்பவில்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு.

"Aadhav Arjuna's comments are solely his responsibility.. not the party's.." - Interview with VKC leader Thirumavalavan!

விசிகவில் இருந்தாலும் ஆதவ் அர்ஜுனா Voice of Common என்ற அமைப்பின் சார்பில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடைய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. கட்சியில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. நாங்கள் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணியில் விசிகவிற்கு பங்கு உண்டு”

இவ்வாறு தெரிவித்தார்.


source https://news7tamil.live/aadhav-arjunas-comments-are-solely-his-responsibility-not-the-partys-interview-with-vkc-leader-thirumavalavan.html