புதன், 1 ஜனவரி, 2025

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

 1//1/25

Commercial LPG cylinder prices slashed by Rs.83

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு

2025 புத்தாண்டை முன்னிட்டு நல்ல செய்தியாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் சிலிண்டர் விலை அதிகரித்து வந்ததால் உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து வந்தது. இப்படி இருக்கையில், புத்தாண்டு இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது சிலிண்டர் விலை குறைந்துள்ளது. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. 

இதனையடுத்து மாதந்தோறும் இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானித்து வந்தது. அதனால் கடந்த சில நாட்களாகவே வணிக சிலிண்டர் விலை உயர்ந்து இருந்தது. அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை  குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ. ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ வீட்டு  உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.818.50 ஆக நீடிக்கிறது. கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/commercial-cylinder-price-decreased-in-tamilnadu-8581989