வியாழன், 6 பிப்ரவரி, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 72 சதவீத வாக்குகள் பதிவு

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 72 சதவீத வாக்குகள் பதிவு 5 2 2025 

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வே.ரா திருமகன் வெற்றி பெற்றார். ஆனால், 2023-ம் ஆண்டு அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தார்.

இதனிடையே கடந்த, டிசம்பர் மாதம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (பிப்ரவரி 5) ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அ.தி.மு.க பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில், தி.மு.க – நாம் தமிழர் கட்சி இந்த இடைத்தேர்தலில் நேரடியாக மோதுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-erode-east-by-election-voting-dmk-vs-ntk-clash-update-in-tamil-8691431