வெள்ளி, 24 ஜூலை, 2026

புதுவை ஆளுநர் மாளிகை முற்றுகை; மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்

 

students protest

நீட் தேர்வு முறைகேடு மற்றும் டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரியும் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

24 07 2026


நீட் தேர்வை ரத்து செய்வதுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக மாணவர் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி அஜந்தா தியேட்டர் சிக்னல் அருகே ஒன்று கூடிய 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் கண்டன கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடி ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்

மிஷின் வீதி வழியாக சென்ற மாணவர்களை போலீசார் தடுப்பு கட்டை அமைத்து போராட்டத்தை தடுத்தனர் இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து தடுப்பு கட்டைகளை அகற்றிவிட்டு மாணவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி முற்பட முயன்றதால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் போராட்ட இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/india/puducherry-students-protest-neet-cancellation-governor-house-siege-police-arrest-12192181