புதன், 15 ஜூலை, 2026

கவுன்சிலிங் போகும் முன் கவனிங்க!

 

கவுன்சிலிங் போகும் முன் கவனிங்க!

New Project (7)

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பலரும் அடுத்து என்ன படிக்கலாம் என்ற கேள்விக்கு பலரும் பெறியியல் படிப்பை தேர்வு செய்வதை ஆண்டுதோறும் பார்க்க முடிகிறது. அதிலும் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம் என்பதால் சிலருக்கு குழப்பம் இருக்கலாம். அதே சமயம், எதிர்காலத்தில் அதிகம் பயன்படும் வகையிலான பாடப்பிரிவை தேர்வு செய்வது அவசிமான ஒன்று. அந்த வகையில், பொறியியல் படிப்பில், அடுத்து என்ன படிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று பெறுகிறது. இதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும். பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் சிறந்த கல்லூரி மற்றும் சிறந்த பாடப்பிரிவுகளை, குறிப்பாக எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளை தரக்கூடிய படிப்புகளை படிக்க விரும்புகின்றனர். 

இதற்காக மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை அலசி ஆராய்ந்து வருகின்றனர். அதேபோல் என்ன பிரிவில் பொறியியல் படிக்கலாம் என்றும் யோசித்து வருகின்றனர். அந்த வகையில் பொறியியல் படிப்பில் எதிர்காலத்தில் எந்த பிரிவு அதிகம் ஆளப்போகிறது என்பது குறித்து கல்வியாளர் தினேஷ் பிரபு ஒரு வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அதில், இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ஹெல்த்கேர் போன்ற துறைகள் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல லட்சம் கோடிகளை இத்துறையில் முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக, 'பிசிகல் ஏஐ' (Physical AI) மற்றும் 'கொலாபரேட்டிவ் ஏஐ' (Collaborative AI) ஆகியவை அடுத்தகட்ட தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தப் போகின்றன.

இத்தகைய அதிநவீன துறையில் நீங்கள் சாதிக்கவும், 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் தமிழகத்தில் எந்தெந்த கல்லூரிகளில் இந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்? லேப்கள் (Labs), சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (Centers of Excellence) மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட டாப் 10 கல்லூரிகளின் பட்டியல் பார்க்கலாம்.

எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், ராமாபுரம் (SRM Easwari Engineering College) கவுன்சிலிங் கோடு: 1304 (சென்னை) கட்-ஆஃப் மதிப்பெண்: 190 (தோராயமாக)

இந்தியாவில் ஐஐடி (IIT) மற்றும் என்ஐடி (NIT)-களில் கூட இல்லாத ஒரு பிரத்யேக தொழில்நுட்பத்தை இந்த கல்லூரி வழங்குகிறது. இந்தியாவின் ஒரே ஒரு ஏ.பி.பி. ('ABB) குளோபல் எக்ஸலன்ஸ் சென்டர் ஃபார் ரோபோடிக்ஸ்' (ABB Global Excellence Centre for Robotics) இந்த கல்லூரியில் தான் அமைந்துள்ளது. ரோபோடிக்ஸ் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கும், சிறந்த பிளேஸ்மென்ட் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பக்காவான சாய்ஸ்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT), அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் கோடு: 4 (குரோம்பேட்டை கேம்பஸ்)

தமிழகத்தின் மிக உயரிய கல்வி நிறுவனமான எம்.ஐ.டி-யில் இந்த பாடப்பிரிவு 2022-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. 2026-ஆம் ஆண்டில் இந்த பேட்ச் மாணவர்களுக்கு மிகச்சிறந்த பிளேஸ்மென்ட்ஸ் கிடைத்துள்ளன. வரும் 2030-களில் நீங்கள் படித்து முடித்து வெளியே வரும்போது, இத்துறைக்கு இருக்கும் அசுர வளர்ச்சியை இந்த கேம்பஸ் உங்களுக்கு சாதகமாக்கித் தரும்.

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology, Coimbatore) கவுன்சிலிங் கோடு: 2006 (கோயம்புத்தூர்)

தமிழகத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் படிப்பை மிக முன்னதாகவே அறிமுகப்படுத்திய டாப் மோஸ்ட் கல்வி நிறுவனம் இதுவாகும். ஆரம்ப காலத்தில் இத்துறையை முதன்முதலில் கொண்டு வந்த பெருமை இந்த கேம்பஸையே சாரும்.

ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் (Rajalakshmi Engineering College - REC, Chennai)

சென்னையின் டாப் பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான REC-யில் 2022 முதல் இத்துறை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதிநவீன லேப்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகள் (Research facilities) இக்கல்லூரியின் கூடுதல் பலம்.
பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் (PSG iTech) கவுன்சிலிங் கோடு: 2011 (கோயம்புத்தூர்)

பி.எஸ்.ஜி குழுமத்தின் மற்றுமொரு புகழ்பெற்ற கல்லூரி. சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன ரோபோடிக்ஸ் ஆய்வகங்களைக் கொண்ட டாப் இன்ஸ்டிடியூஷன்.

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Chennai Institute of Technology - CIT)
இக்கல்லூரி ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறைக்குத் தேவையான இண்டஸ்ட்ரி கனெக்ட் (Industry Connect) மற்றும் எக்ஸலன்ஸ் சென்டர்களை மிகச்சிறப்பாகக் கொண்டுள்ள முன்னணி கல்லூரியாகும்.

தானிஷ் அகமது கல்லூரி (Dhaanish Ahmed College of Engineering, Chennai) கவுன்சிலிங் கோடு: 1424

கடந்த ஆண்டின் குளோசிங் கட்-ஆஃப் 153. ரோபோடிக்ஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இதுவும் ஒரு சிறந்த சாய்ஸ்.

ஜெருசலேம் இன்ஜினியரிங் காலேஜ் (Jerusalem College of Engineering, Chennai) கவுன்சிலிங் கோடு: 1126

ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறைக்கென பிரத்யேக அபெக்ஸ் லேப்கள் (Apex Labs) மற்றும் ஸ்பெஷாலிட்டி வசதிகளை இக்கல்லூரி தன் வசம் வைத்துள்ளது.

தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி (Thanthai Periyar Government Institute of Technology - TPGIT, Vellore) கவுன்சிலிங் கோடு: 1516

கடந்த ஆண்டின் குளோசிங் கட்-ஆஃப் 177.5. குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரியில் ரோபோடிக்ஸ் படிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.

கே.ஜி.ஐ.எஸ்.எல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (KGISL Institute of Technology, Coimbatore) கவுன்சிலிங் கோடு: 2751

கோயம்புத்தூரில் அமைந்துள்ள இக்கல்லூரி ஐடி மற்றும் ஆட்டோமேஷன் துறையில் சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-top-most-engineering-college-for-feature-life-course-update-in-tamil-12164238