செவ்வாய், 31 மார்ச், 2015

அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்

சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....
🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...
🌏100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....
மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!
தமிழன்டா..........
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!
கண்டிப்பாக படித்து பகிரவும் ....
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

திங்கள், 30 மார்ச், 2015

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

'வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.'

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

அல்குர்ஆன்

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன்: 13:3)

தெரிந்தது கொல்ளவும்.........

அஞ்சலகத்தின் -ஒப்புகை அட்டை வரவில்லையா

ஒப்புகை அட்டை வரவில்லையா..... அப்படி நமக்கு ஒப்புகை அட்டை வந்தாலும் அதில் உரிய அலுவலகத்தின் முத்திரை. அதிகாரி கையெப்பம்.தேதி இல்லையா....
அஞ்சலகத்தின் மீது எங்கு புகார் செய்வது.......
இதோ முகவரி
'ஒப்புகை அட்டை வரவில்லையா..... அப்படி நமக்கு ஒப்புகை அட்டை வந்தாலும் அதில் உரிய அலுவலகத்தின் முத்திரை. அதிகாரி கையெப்பம்.தேதி இல்லையா....

 அஞ்சலகத்தின் மீது எங்கு புகார் செய்வது.......  

இதோ முகவரி'

ஆன்லைனில் india post வெப்சைட்டில் consignment பகுதியில் உங்கள் கடிதம் பெறுநரிடம் சேர்க்கப்பட்ட தேதி நேரம் போன்றவை இருக்கும். அது போதும்.

அப்படி சரிபார்க்க வேண்டுமானால் உங்கள் கடிதம் தபால் நிலையத்தில் பதிவு செய்த போது உங்களுக்கு அளிக்கப்பட்ட ரசீது தேவை.

அந்த ரசீதில் IN நம்பர் இருக்கும். அந்த நம்பரை முழுமையாக பயன்படுத்தவும்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2830

சனி, 28 மார்ச், 2015

இறால் வளர்ப்பு! - கிராம புற மக்களுக்கு ஏற்ற தொழில்

நல்வருமானம் தரும் இறால் வளர்ப்பு! ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!
1) தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!
2) 100 நாட்களில் வருமானம்!
3) கிலோ 500 -700 ரூபாய்
4) சூரிய வெளிச்சம் அவசியம்!
5) நான்கு வேளைகளில் தீவனம்!
6) தீவனம்... கவனம்!

கிராம புற மக்களுக்கு ஏற்ற தொழில், 90 சதவிதம் ஏற்றுமதி செய்யலாம். இத் தொழிலை பற்றி 

Marine Products Export Board Chennai,
Phone: 044-26269192. Srinivasan,
Cell phone: 90434-11312.
(Or) also contact
Shrimp rearing advice, training and technical assistance. Those in need can access the center by below contact number
Fishery Training and Research Centre in Thanjavur,
Phone: 04362-291625, mobile: 99441-61466

அநீதிகள் மேலும் தொடராவண்ணம் தடுத்து நிறுத்தி

மோடி ஆட்சி வந்ததிலிருந்து, நமது தேசத்தில் - நமது முஸ்லிம் சமுதாயத்தவருக்கு, ரகசியமாகவும் - பகிரங்கமாகவும் ஏற்படும் சொல்லொணா அநீதிகள் மேலும் தொடராவண்ணம் தடுத்து நிறுத்தி, சமுதாயத்தை காவி தீவிரவாதிகளின் திட்டமிடப் பட்ட அழிவிலிருந்தும் காப்பாற்றிட கீழ்க்காணும் 10 விஷயங்கள் தீர்வாக இருக்கும் என நான் நம்புகிறேன்....
எனது கருத்துக்களில் - நம்பிக்கையில் உங்களுக்கும் உடன்பாடு உண்டு என்றால் உங்களது ஒப்புதலை SHARE மூலம் பதியவும்.
1) மிகைத்த வல்லமையாளன் அல்லாஹ் விதித்ததை தவிர வேறொன்றும் எங்களை நெருங்காது என்னும் அசைக்க இயலாத நம்பிக்கை அருளாளன் அல்லாஹ்வின் மீது.
2) நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அல்லது நேரத்தை கிடைக்கும்படியதாக ஆக்கி திருமறையை தெளிந்த விளக்கத்தோடு அறிந்து கொள்ளுதல்.
3) ஐவேளை தொழுகையை பற்றிபிடித்தல்; நபிகளார் தடுத்தவற்றை - ஹராமானவற்றை இயன்றவரை தவிர்த்தல் - தவிர்ந்திட முழு முயற்ச்சி எடுத்தல்.
4) குடும்ப - பொருளாதார முன்னேற்றத்தில் ஓய்வின்றி கவனம் செலுத்துதல்; தொழி துறையில் பிரம்மாண்ட அளவில் உயருதல்.
5) மார்க்க கல்வி - உலக கல்வி இல்லையென்றால் நாம் கல் - மண்ணை விட உபயோகம் அற்றவர்கள் என்பதை உணருதல்.
6) "அரசியல் எனக்கு பிடிக்காது; அரசியல் என்று சொன்னாலே எனக்கு வெறுப்பு" என்பன போன்ற பத்தாம் பசலித்தனமான சிந்தனைகளை விட்டும் வெளியில் வந்து, அரசியலில் நாம் ஒதுங்கி நிற்பதால்தான் நமது சமுதாயம் எதிர்த்து நிற்க ஆதரவின்றி - அதிகார துணை இன்றி படிப்படியாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்னும் ஆபத்தான உண்மையை புரிந்து, அரசியல் - அதிகாரங்களை வென்றெடுக்க, ஆழமான அரசியல் அறிவை பெறுவது.
7) "எல்லா முஸ்லிம் இயக்கங்களும் - கட்சிகளும் ஒன்றாக ஆகி ஒரே இயக்கமாக அல்லது ஒரே கட்சியாக ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்" என்னும் ஒரு காலத்தும் நடக்க இயலாத ஒரு விஷயத்தை எண்ணி வீணாக காலம் கடத்தாமல், தனித்தனி கொள்கைகளுடன் - செயல்பாடுகளுடன் நமது சமுதாய நலன் விரும்பும் அனைத்து கட்சிகளின் - இயக்கங்களின் நல்ல விஷயங்களை பகிரங்கமாக ஆதரித்து - தவறான விஷயங்களை ரகசியமாக ஆனால் கடுமையாக கண்டித்து எந்த ஒரு இடத்திலும் என் சகோதரனை விட்டு கொடுக்க மாட்டேன் என்னும் மனோபாவத்தை வளர்த்து கொள்ளுதல்.
8) இந்து சகோதரர்கள் வேறு; காவி தீவிரவாதிகள் வேறு என்பதை முதலில் நாம் நன்கு விளங்கி கொண்டு, அந்த இருவருக்குள்ளும் இருக்கும் எதிரெதிர் வேறுபாட்டை அனைத்து உண்மையான இந்து சகோதரர்களிடமும் கொண்டு சேர்த்து, இந்து - முஸ்லிம் சகோதர பந்தத்தை முன்பு இருந்ததை விட - இப்பொழுது இருப்பதைவிட - அதிகமாக - வலுவாக - வேகமாக அமைப்பது.
9) R.S.S மற்றும் அதன் அத்தனை துணை அமைப்புகளையும் - அவர்களது கொள்கைகள் - கோட்பாடுகள் - செயல்பாடுகள் - பயங்கரவாத திட்டமிடல்கள் அனைத்தையும் நொடிப்பொழுதும் விலகாத கண்காணிப்புடன் பின் தொடர்ந்து, அவைகள் அனைத்தையும் ஆதார தெளிவுகளுடன், உண்மையான இந்துக்களிடமும் - முஸ்லிம்களிடமும் - அனைத்து இந்தியர்களிடமும் தொடர்ந்து கொண்டு சேர்த்தல்; நமது சமுதாயத்திற்கு - தேசத்திற்கு எதிரான எந்த செயல்களும் நடந்து விடுவதற்கு முன்னர் அதனை வெளிப்படுத்தி, அவர்கள் தலைதூக்க எண்ணும் பொழுதெல்லாம் அவர்களது திட்டங்களை தகர்த்தல்.
10) நமது சமுதாயத்தின்மீது பயங்கரவாத பொய் பட்டம் சுமத்தி, நமது சமுதாயத்தை மட்டும் குறி வைத்து கடித்து குதறிடும் இந்திய ஊடகங்களை நெஞ்சுரத்தோடு - வலுவான ஆதார தெளிவுகளோடு - அறிவுப் பிழம்பாய் பாய்ந்துவரும் வாதத் திறமைகளோடு எதிர்கொள்ள, தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் - கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட தற்பொழுதைய "ஊடக சந்திப்பாளர்கள்" அனைவரையும் உள்ளடக்கிய, நமது சமுதாயத்திற்கென "பொது ஊடக சந்திப்பாளர் அமைப்பை" உருவாக்கி, எந்த ஊடகங்கள் நம்மை இந்த தேசத்தை விட்டும் தனிப்படுத்தும் இயந்திரமாக சுழல்கிறதோ, அதே ஊடகங்கள் நமது சமுதாயத்தின் உண்மையின் பக்கம் சுற்றி சுழல வைப்பது.
--T.H.MU--

வெள்ளி, 27 மார்ச், 2015

‎விளையாட்டை‬ விளையாட்டாக பாருங்கள்.

பாக்கிஸ்தான் காரன் 10கிலோ மீட்டர் உள்ளே வந்தபோது தேசப்பற்றை காணவில்லை?
சைனாகாரன் 20 கிலோ மீட்டர் உள்ளோ வந்தபோது நாட்டுப்பற்றை காணவில்லை?
அந்நிய முதலீடுகள் என்ற பெயரில், இந்தியாவை அந்நியர்களுக்கு அடிமைப்படுத்தும் போது நாட்டுப்ப்பற்றை காணவில்லை?
சக இந்தியன் உணவில்லாமல் மரணத்தை தளுவும் போது நாட்டுப்பற்றை காணவில்லை?
இந்தியாவின் முதுகுத்தண்டுவடமான விவசாயிகள் நஷ்டத்தில் உயிரை மாய்த்த போது காணவில்லை தேசப்பற்றை?
அந்நிய பெருட்களை வாங்கும் போதும், உபயோகிக்கும் போதும் காணவில்லை தேசப்பற்றை?
ஆனால் இரண்டு அணிகள் விளையாடும் போதுமட்டும் எங்கிருந்து வருகின்றது தேசப்பற்று?
##‪#‎விளையாட்டை‬ விளையாட்டாக பாருங்கள். ஒரு போதும் விளையாட்டில் தேசப்பற்றை நிரூபிக்க இயலாது. காரணம் விளையாட்டில் வெற்றி தோல்வி உண்டு. தேசப்பற்றில் வெற்றி/தோல்வி இல்லை. அது நமது இரத்த்தில் ஊரிப்போன ஒன்றாக, மரணம் வரை இருக்க வேண்டிய ஒன்று.

அதிசயிக்க வைக்கும் ஃபின்லாந்து கல்விமுறை..!!!

'அதிசயிக்க வைக்கும் ஃபின்லாந்து கல்விமுறை..!!!

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்!

பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து.உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்
போட்டிபோட முடியவில்லை.

‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர்.

மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.

ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக்
கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம்,
விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

௧. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.

௨. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.

௩. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை.

௪. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.

௫. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.

௬. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.

௭. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.

௮. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.

௯. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி
என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.

பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56
நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. ‘பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிசிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை.

கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம். அதே நேரம், அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!

மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில்
ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!

பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம்'

பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம்

தொழுகை நடக்காத பள்ளிவாசல்..

அன்று ஈதுஹா வாகவும்............
இன்று கபுர் இல்லா தர்ஹா வாகவும்.......
திகழும் எங்கள் ஊர் சின்னம்.........
தொழுகை நடக்காத பள்ளிவாசல்......
மன்னிக்கவும்...........
"""முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்"""
Yahiya Khan's photo.
Yahiya Khan's photo.
Thnks: Yahiya Khan 
Yahiya Khan's photo.
Yahiya Khan's photo.

அல்குர்ஆன் - படிப்பினை

(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 12:109-111)

Hadis -துன்பம் ஏற்படும்போது

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா” 
என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (இன்னா லில்லாஹி... என்று) நான் கூறினேன். அல்லாஹ் அபூசலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான்.
முஸ்லிம்:1675

வியாழன், 26 மார்ச், 2015

ரத்த அழுத்தம்-சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சிறுதானியம்

எந்திரத்தனமான இந்த உலகில் நவதானியம் என்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு காட்சி பொருளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு பொதுமக்களிடம் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. நாம் உண்ணும் உணவு உடலுக்கு பசியை போக்குவதாக மட்டும் இருந்தால் போதாது. 

உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு, ஊட்டச்சத்துக்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட உணவு வகைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம்.
அந்த ஊட்டச்சத்துக்களை நமக்கு தருவது நவதானியம் மட்டுமே.

தமிழ்நாட்டின் பிரதான உணவு பயிரான நெல்லுக்கு அடுத்த படியாக உணவு தானிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பவை.

சிறு தானிய பயிர்களான சோளம், கம்பு, ராகி, வரகு, பனிவரகு மற்றும் குதிரை வாளியாகும்.

சிறு தானியம் பயிரிடும் பரப்பானது 10.58 லட்சம் ஏக்கரில் இருந்து தற்போது 6.31 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. மேலும் அதன் உற்பத்தி 19.67 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 15.57 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.

சிறுதானிய பயிர்கள் வறண்ட சீதோஷ்ண நிலையிலும் குறைந்த மண் வளம் உள்ள இடங்களிலும் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மக்களிடம் சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் இவ்வகை சிறு தானிய பயிர்களின் தானியங்களுக்கு சிறந்த விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது இனி வரும் ஆண்டுகளில் சிறு தானிய பயிர்கள் விவசாயிகளால் பெருமளவு பயிரிடப்படும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

சிறு தானிய பயிர்களானது நாம் தற்போது அதிக அளவில் உட்கொள்ளும் அரிசியை விட அதிக அளவ ஊட்டச்சத்து, நார்பொருட்கள், வைட்டமின்கள் கொண்டுள்ளது. சிறுதானிய உணவு பொருட்கள் குழந்தைகளுக்கும்,
பெரியவர்களுக்கும் மிகவும் உகந்தது. இவற்றை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் முதலியவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

பாரம்பரிய சிறு தானியங்களில் இருந்து உணவு சமைத்து உண்டு வந்த பொழுது அதிக அளவில் உடல் நோயின்றி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சிறு தானிய பயன்பாடு குறைந்த பின்பு பல்வேறு வகையான நோய்களுக்குக்கு ஆட்பட்டு உணவுக்க இணையான அளவு மருந்துகளையும் உண்ணுகின்ற சூழ்நிலைக்கு ஆளாகி விட்டனர்.

குறிப்பாக உலகத்தில் உள்ள 15 கோடி சர்க்கரை நோயாளிகளில் இந்தியாவில் மட்டும் 3 கோடியே 50 லட்சம் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மக்கள் தொகையான சுமார் 7 கோடியில் 70 லட்சம் பேர் அதாவது 10-ல் ஒரு நபர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்நிலையை மாற்ற பாரம்பரியமாக நாம் உண்டு வந்த உணவுகளை வரும் தலை முறையினருக்கு மீண்டும அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.

பாரம்பரிய பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கீழே உள்ளவற்றை உணவாக
சமைத்து சாப்பிட்டால் அழிந்து வரும் இந்த பயிர்களும்,மனித வளமும் மேன்மையுறும்.

நம் பண்பாட்டின் பாரம்பரிய உணவு பழக்க வழக்கமும் மீட்டெடுக்கப்படும். வரகரிசி, கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு உள்பட பல பொருட்களை சேர்த்து வரகு தம்பிரியாணி, கம்பு, ராகி, தினை, வரகு, சோளம், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸ் மில்லட் அடை சமைத்து சாப்பிடலாம்.

கம்பு மாவு, சோளமாவு, ராகிமாவு உள்பட பல பொருட்களை சேர்த்து மிக்ஸ் மில்லட் சப்பாத்தி சமைக்கலாம். முளை கட்டிய
ராகி, தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து ராகி மஞ்சூரியன் சமைத்து சாப்பிடலாம். தினை அரிசி, பால், தண்ணீர், கன்டென்ஸ்டு மில்க், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்துதினை பயாசம் தயாரிக்கலாம்.

கம்பு மாவு, பச்சைப்பயிறு மாவு, பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழம், கருப்பட்டி, பால் சேர்த்து கம்பு லட்டு தயாரித்து சாப்பிடலாம்.

சாமை அரிசி, பயத்தம் பருப்பு, நெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி சேர்த்து சாமை கல்கண்டு பாத்தும், வரகரிசி, பொட்டுக்கடலை மாவு, வெண்ணை, சூடான எண்ணை, எள், ஓமம் சேர்த்து வரகு முறுக்கும், கம்பரிசி, கடலை பருப்பு,
வெல்லம் சேர்த்து கம்பு இலை அடையும் சமைக்கலாம்.

வரகரிசி, பயித்தம் பருப்பு சேர்த்து வரகு பொங்கலும், சோள அரிசி, தண்ணீர் சேர்த்து சோள சாதம் மற்றும் சோளம், பயத்தம்பருப்பு, மிளகு சேர்த்து சோள உசிலி தயாரிக் கலாம்.

குதிரைவாலி அரிசி, கேரட், பட்டாணி பீன்ஸ், வெங்காயம், கெட்டியான தேங்காய்பால், முந்திரி சேர்த்து குதிரை வாலி புலாவ் செய்யலாம்.

வரகரிசி, அரைத்த தக்காளி விழுது, வெங்காயம், இஞ்சி, பட்டாணி சேர்த்து வரகு தக்காளி பாத் தயாரிக்கலாம்.

வரகு கம்பு, சோளம், உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தானிய தோசை சமைக்கலாம். வரகு அவல்,சோள அவல்,
வேக வைத்த கேரட், பட்டாணி உருளை கிழங்கு சேர்த்து மில்லட் அவல் உப்புமா தயாரிக்கலாம்.

கம்பரிசி, பருப்பு, பாசிப்பயிறு

சேர்த்து கம்பு பருப்பு சாதம் செய்யலாம்.தினை அரிசி, தேன், ஏலக் காய், நெய் சேர்த்து தினை மாவு தயாரிக்கலாம்.

உடைத்த கம்பு குருணை, கடைந்த தயிர், மோர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து கம்பங்கூழ் செய்யலாம். சோள மாவு, வேக
வைத்து மசித்த துவரம் பருப்பு சேர்த்து சோள அமிர்த பலம் தயாரிக்கலாம்.

வெள்ளை சோளம், மக்காச்சோளம், வெங்காயம், வெள்ளரிக்காய், துருவிய கேரட் சேர்த்து சோள மசாலா பொரி தயாரிக்கலாம்.

சோள அரிசி, சோள அவல், புளித்த தயிர், சர்க்கரை சிட்டிகை சேர்த்து அவல் தோசை செய்யலாம். கம்பரிசி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கம்பு கொழுக்கட்டை தயாரிக்கலாம். சோள அரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சோள உப்புமா செய்யலாம்.

சோளமாவு, வெந்நீர், சர்க்கரை, எண்ணை, நெய் சேர்த்து சோள ரொட்டி தயாரிக்கலாம். கம்பு அல்லது கம்பரிசி, முழு உளுந்து, வெந்தயம், ஆமணக்குவிதை சேர்த்து கம்பு இட்லி செய்யலாம். சாமை, தயிர், பால், திராட்சை, முந்திரி, மாதுளம் பழம்
ஆகியவை சேர்த்து தயிர் சாதம் செய்யலாம்.

மருத்துவ பயன்கள்:

குதிரைவாலியில் நார்சத்து மிகுதியாக காணப்படுவதால் உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது.இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாக பயன்படுகிறது.

உடலில் கப ஆதிக்கம் அபகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள். தினை அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளிகாய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.

கேழ்வரகு :

கேழ்வரகிலுள்ள மாவுச் சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மை உள்ளதால் கேழ்வரகினை உண்பதால் நீரிழிவு நோய்
வராமல் தடுக்கவும், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரண சக்தியையும் அதிக மாக்கவும், ரத்தத்தில் உள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

பனிவரகு எலும்புகள்மற்றும் பற்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் உள்ள நார் சத்து உணவு பொருட்களின்
செரிமானத்திற்கு உதவுகிறது.

சோளம் :

தானியம் உணவாகவும், உலர்ந்த சோளத் தட்டை கால் நடை தீவனமாகவும் பயன்படுகின்றது. சோளத்தில் உடலுக்கு
தேவையான ஆற்றல், புரதம், உயிர் சத்துகள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அரிசி சார்ந்த உணவை விட
சோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.

மக்காச்சோளம் :

தானியங்கள் உணவாகவும், மாட்டு தீவனமாகவும், கோழித்தீவனமாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. எரிவாயு தயாரிப்பதற்கு மூலப்பொருளாக கொதிகலன்களில் உலர்ப் பான்களில் பயன்படுகின்றன. மக்காச்சோளம் மாவு, ரொட்டி, புட்டு மற்றும் உணவு கலவை செய்வதற்கும் பயன்படுகிறது. மேலும்
இனிப்புகள்,சாஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட் மற்றும் கேக்குகள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

கம்பு :

மற்ற தானியங்களை விட கம்பு அதிக புரதசத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களையும் அதிகம் பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகிறது.போதிய அளவு மாவு சத்தும், அதிக ருசியை கொடுக்க கூடிய கொழுப்பும், வைட்டமின்களும், தாது உப்புகளும் இத்தானியத்தில் நிறைந்துள்ளன. மேலும் ரத்த அபிவிருத்திக்கான இரும்பு சத்து மற்ற தானியங்களை விட இதில் அதிக அளவில் உள்ளது.

சாமை :

சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கி சுறுசுறுப்பை தரும். எலும்புகளுக்கும் ஊட்டசத்து அளிக்கும். இதை தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு புலப்படும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.

வரகு :

வரகில் அடங்கியுள்ள அதிக அளவு லெசித்தின் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் `பி' வைட்டமின்கள் குறிப்பிடும் படியாக நியாசின் மற்றும் போலிக், ஆசிட், தாது உப்புகள், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கி உள்ளன.

வரகு உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல உணவாகும். சீரான எடை குறைப்பிற்கும் உடல் பருமனால் ஏற்படும் மன அழுத்தத்திற்கும் நல்ல தீர்வாக பயன்படுகிறது

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு

'கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த… இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.'

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.
கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த… இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.
சூட்டைக் கிளப்புமா?
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.
கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

Hadis

மரம் நடல் ஓர் அறச்செயல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து மனிதனோ மற்ற உயிரினமோ உண்டால் அதற்காக ஒரு தர்மம் செய்த நன்மை அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரீ (நபிமொழி எண் : 6012)

புதன், 25 மார்ச், 2015

Jobs

We are looking for an ASP.NET Developer

Required Skills and Experience:

• Professional programming experience with ASP.NET Web Forms and C# at least 3 years
• Experience with databases such as Microsoft SQL Server, MySQL
• Experience with the following: Adobe Photoshop CS5/CS6/CC, MacroMedia Dreamweaver 8.0
• Experience with HTML/HTML5, CSS, AJAX and JavaScript
• Bachelor’s or Master’s Degree in Computer Science or similar
• Strong communication and problem solving skills
• Be able to meet deadlines in a fast paced environment
• Very good written and spoken English

Apply with the Expected salary and Picture@

HRJOBS393@YAHOO.COM

*********
We are looking for T & I Engineer. Any interested candidates, Please submit your CV along with supporting documents to: bd@bitsgroups.com

The details as follows

Profile

Engineer (Preferable Mechanical Engineer) 
Experience 5-10 years in Maintenance of following equipment, preferable in power plants.:
Pumps >100kW, Air Sealed Dampers, High Steam Pressure Valves from 1 inch to 36 inch dia, Water valves up to 54 inch, Piping installation from 1 inch till 54 inches dia., Experience in overhaul/outages, Experience in Assembly/disassembly, Inspection and quality control of mentioned equipment’s, Lifting plans, Scaffolding plan, Experience in definition of Spare Parts, Highly proficient in MS (Word and Excel), Experience in creation of procedures (method of statement)

ROLE

Consult O&M Manuals and drawings
Identify required resources (Spare parts, Manpower, Tools/equipment, services).
Prepare the method of statement for the task
Generate step by step procedures
Generate Job Safety Assessment
Generate reports 

கர்வாப்ஸி' என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாத பிரச்சாரத்தை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டு வருகின்றன

சங்பரிவார்களின் வழிகாட்டுதலில் கலாச்சார பயங்கரவாதம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடல்
'கர்வாப்ஸி' என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாத பிரச்சாரத்தை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டு வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
புதுச்சேரியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, நரேந்திர மோடி தலைமை பாஜக ஆட்சி மீது கடும் விமர்சனங்களை அடுக்கினார்.
“சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் கர்வாப்ஸி என்ற பெயரில் பயங்கரவாத பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
நாட்டை மத ரீதியாகத் துண்டாடுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பதற்றத்தையும், அச்சம் ஏற்படுத்தக்கூடிய மனநிலையையும் உருவாக்கி, நாட்டின் முக்கியமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகிறது.
சர்ச்கள் தாக்கப்படுகின்றன. சங்பரிவாரின் வழிகாட்டுதல்களின் படி கலாச்சார பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அறிவியல் ரீதியான மனநிலைகளுக்கு பங்கம் ஏற்படுத்தப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் மீதான அடக்கு முறை அதிகரித்து வருகிறது.
மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவித்து அந்த இடத்தில் கோட்ஸே வழிபாடு முன் வைக்கப்படுகிறது. சகிப்புத் தன்மை அற்ற நிலையும், வெறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதில் பாஜக-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மேட்ச் பிக்சிங் உள்ளது” என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து சுதாகர் ரெட்டி கூறுகையில், "தேர்தல், மதவாத-கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியைக் கொண்டு வந்துவிட்டது. சங்பரிவாரின் நேரடி ஆசியுடன் இயங்கும் பிற்போக்குவாத ஆட்சியைக் கொண்டு வந்துள்ளது" என்றும் சாடியுள்ளார்.
நன்றி:தி இந்து
'சங்பரிவார்களின் வழிகாட்டுதலில் கலாச்சார பயங்கரவாதம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடல்

நன்றி:தி இந்து'

அதிர்ச்சி அளிக்கும் அறிக்கைகள்: மோடி ஆட்சியின் 300 நாட்கள்

மோடி ஆட்சியின் 300 நாட்கள்:மனித உரிமை அமைப்புகள்,தொழிற்சங்கங்களின் அதிர்ச்சி அளிக்கும் அறிக்கைகள்:
புதுடில்லி, மார்ச் 22- மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் நடந்துள்ளன; அதில் 49 பேர் மரண மடைந்துள்ளனர் என்று தொழிற்சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித் துள்ளன.
மோடி ஆட்சியின் கீழ் அதிகரித்து வரும் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து புதுடில்லியில் நாடாளு மன்ற வீதியில் நாடு முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட தொழிற்சங் கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.
அப்போது மோடி ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் என்ற பெயரில் 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி ஆட்சிக்கு வந்து 300 நாட்களில், இன்றைக்கு மார்ச் வரை 600 மதக் கலவரங்கள் நடத்தப்பட் டுள்ளன. இவை திட்ட மிடப்பட்டு சிறுபான்மை யினர் அதிகமாக இருக் கும் பகுதிகளில் நடத்தப் பட்டவையாகும். இந்த கலவரங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 149 தாக்குதல்கள் கிறிஸ் துவர்கள் மீது நடத்தப் பட்டுள்ளன.
மீதி முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்டவை யாகும். ஆனால், கிறிஸ் தவ அமைப்புகள் 168 வன் முறைகள் நிகழ்ந்துள்ள தாக ஆவணப்படுத்தியுள் ளன. இதில் சத்தீஸ்கரில் தான் அதிகபட்சமாக 28 சம்பவங்கள் நடந்துள் ளன. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 26ம் உத்தரப்பிரதேசத்தில் 18ம் தெலுங்கானாவில் 15ம் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 73 வயது இறைப்பணி செவிலியர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரம் ஒரு திட்டமிட்ட சிறுபான் மையினர் மீதான வன் முறையின் ஒரு பகுதி யாகும்.
இது எங்குமே நடை பெறாத கொடூரம் ஆகும். நேரடியான கலவரங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நீங்கலாக, ஜனநாயக அமைப்புகள் மீது எண்ணற்ற தாக்கு தல்கள் தொடுக்கப்பட் டன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
நன்றி : விடுதலை நாளிதழ்
'மோடி ஆட்சியின் 300 நாட்கள்:மனித உரிமை அமைப்புகள்,தொழிற்சங்கங்களின் அதிர்ச்சி அளிக்கும் அறிக்கைகள்:

 நன்றி  : விடுதலை நாளிதழ்'