சன், ஜெயா, கலைஞர், கேப்டன், மக்கள் டிவி என அனைவரும் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதையும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும், ஜெயின், மார்வாடிகள் சமூகத்துக்கு (ஆர்எஸ்எஸ்க்கு நிதி கொடுப்பவர்கள்) சொம்படிப்பதையும் கண்கூடாக பார்கிறோம்.
இவர்கள் தான் தனி ஒருவனின் தவறை கூட இஸ்லாமிய தீவிரவாதம் என பரப்பியவர்கள். மக்கள் மத்தியில் இஸ்லாமிய பெருமக்களுக்கு கிடைத்துள்ள நன் மதிப்பு இவர்களுக்கு அச்சத்தையும், கோபத்தையும் உண்டாக்கி உள்ளதும் உண்மை.
இதே மீடியாக்கள் நாளை மொத்தமாக இஸ்லாமிய தீவிரவாதம் என கூப்பாடு போடும். அதையும் நம்ம மக்கள் நம்புவார்கள்.. நம்பிட்டு போகட்டுமே.. நாம் செய்வதை செய்வோம் அதன் நன்மைகள் இறைவனிடத்தில் கிடைக்கும்..
பேஸ்புக் ஒன்றே எங்களுக்கான தற்போதைய ஊடகம், இன்று நாங்கள் பதியாமல் விட்டால் நாளை எங்களுக்கான வரலாறே கூட இல்லாமல் ஆக்கிவிடுவார்கள். இருக்கும் வரலாறையை திரித்து கூறுபவர்களுக்கு இதல்லாம் பெரிய விசயம் அல்ல. ஏன்? இஸ்லாமியர்கள் உதவி செய்வதை இங்கே பதிந்து பெருமை படுகிறிர்கள் என கேட்பவர்களுக்கு இது.