புதன், 23 டிசம்பர், 2015

ஒற்றுமை இல்லை என்கிறீர்கள் ஏன் இல்லை என்று சிந்தித் தீர்களா!


தமிழகத்தில் இயக்கம் என்றால் என்ன அரசியல் என்றால் என்ன என்ற புரிந்துணர்வு அனேக இஸ்லாமிய இயக்க தலைவர் களுக்கும் தொண்டர்களுக்கும் இல்லாததாலேயே இந்த நிலை .
இயக்கம் குறித்து புரிந்துணர்வும் . அரசியல் குறித்த நெளிந்த பார்வையும் இருப்பதாலேயே தமிழர்கள் மளையாளிகள் கன்னடர்கள் 'மனிப் பூரிகள். ராஜஸ்தானிகள் ஏன் நாளை குஜராத்திகள் கூட எங்களோட இனைந்து கொள்வார்கள்
மார்கத்தையும், அரசியலையும் தனித்தனியாக பிரித்து பார்த்தது முதல் தவறு
தலைவர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கு மார்க ரீதியாகவும்" அரசியல் ரீதியாகவும் எழும் கருத்து வேறுபாடுகளையும் , சிந்தாந்த வேறுபாடுகளையும் பிரித்து பார்க்கும் அறிவு இல்லாமல் போனது இரண்டாவது தவறு - இந்த அறிவு இருந்திருந்தால் கருத்து வேறுபாட்டை காரணம் காட்டி இத்தனை இயக்கங்கள் தோன்றி இருக்காது
என்னோட சேர்ந்து பயணிக்கும் சகோதரனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகளே இல்லை என பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால் என் மரணம் வரை அல்லது அந்த சகோதரனைின் மரணம் வரை எங்களுள் சித்தாந்த வேறுபாடு எழாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்
எங்கள் சித்தாந்தம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக எங்கள் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை கவனத்தில் கொள்ள மாட்டோம்'
இந்த மனோ நிலைக்கு தமிழகத்தில் இருகம் ஓட்டு மொத்த இஸ்லாமிய சமூகம் வரும் பட்சத்தில் மட்டுமே தமிழகத்தில் நீங்கள் கூறும் ஒற்றுமை சாத்திய படலாம்.
ஆனால் இந்திய அளவில் இதே மனோநிலையோடு ஈயத்தால் வார்க பட்ட ஒரு அணி கட்டி எழுப்பபட்டுவிட்டது
உடனே உங்களை அந்த அணியில் இணைத்துக் கொள்ளுங்கள் காரணம் அந்த அணிக்கும் உங்களுக்கும் எந்த சித்தாந்த வேறுபாடும் இல்லை. 
(thanks- Mohamed Abbas)
"