புதன், 30 டிசம்பர், 2015

‪#‎பதஞ்சலி‬ நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் :பத்திரிக்கை அறிக்கை.

பத்திரிக்கை அறிக்கை.
‪#‎பதஞ்சலி‬ நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் தமிழ்நாடு‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத்
மார்க்க அறிஞர்கள் பத்வா (தீர்ப்பு)
செய்தி ஆசிரியர் அவர்களுக்கு...
யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி சார்பில் உணவு பொருட்களும், அழகு சாதன , பொருட்களும் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்பட்டு கடைகளின் வாயிலாகவும் இணையதளங்களின் வாயிலாகவும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளில்‪#‎மாட்டு‬ மூத்திரத்தையும் ஒரு மூலப்பொருளாக சேர்க்கின்றனர். மாட்டு மூத்திரம் முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் பயன்படுத்தக்கூடாத‪#‎ஹராமான‬ பொருளாகும்.
ஆகையால் இதை மூலப்பொருளாக வைத்து தயாரிக்கப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும்‪#‎முஸ்லிம்கள்‬ பயன்படுத்தக் கூடாத ஹராமான பொருளாக மாறி விடுகிறது. எனவே பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் பத்வா (தீர்ப்பு) அளிக்கிறது.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய பொருட்களின்
மூலப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது அறியாமையினாலோ முஸ்லிம்கள் பதஞ்சலி நிறுவனத்தின் ஹராமான பொருட்களை பயன்படுத்தி விடக் கூடாது என்ற காரணத்தினால் இந்த பத்வா அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படிக்கு
மு.முஹமது யூசுப்
மாநில பொதுச்செயளாலர்
தழிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்
தொடர்புக்கு;978903030

Related Posts: