முடிந்தால் உதவுங்கள் இல்லை என்றால் பகிரவும்.
வறுமையில் வாடும் மாநில ஓட்டப்பந்தைய வீரர் அக்பர் அலி! ஒலிம்பிக் கணவு நிறைவேறுமா?
வறுமையில் வாடும் மாநில ஓட்டப்பந்தைய வீரர் அக்பர் அலி! ஒலிம்பிக் கணவு நிறைவேறுமா?
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கடைத்தெரு, பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் முகமதுயூனிஷ் ஆமினாபீவி ஆகியோர்களின் ஒரே மகனான அக்பர்அலி(22).
10–ம் வகுப்பு வரை படித்து ஒரு வருட விளையாட்டு துறை படித்து அதற்கான சான்றுகளையும் பெற்றுள்ளார் மேற்கொண்டு படிப்பதற்கு குடும்பத்தில் வசதி வாய்ப்பு இல்லாததால் சிறு வயது முதல் பள்ளியில் ஒட்டபந்தயங்களில் கலந்து கொண்டு பல முறை முதலாவது, இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். இதனையே முழு முயற்ச்சியுடன் தற்போது மாவட்ட அளவில் தேசிய அளவில் அனைத்து மரத்தான் ஒட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்று வருகிறார்.
சென்னையில் தேசிய அளவில் நடந்த போட்டியில் 100 கீ.மீ 12 மணி நேரத்திலும், 42 கீ.மீ தூரத்தை 3 மணி நேரத்திலும் 10 கீ.மீ 32 நிமிடங்களில் கடந்து பரிசுகளை பெற்றுள்ளார். மற்ற நேரங்களில் குடும்ப வருமானத்திற்க்காக பெயின்ட் வேலைகளுக்கு சென்று வருகிறார்.
தந்தை முகமதுயூனி கடந்த எட்டு வருடங்களுக்கு முன் தங்களை விட்டு பிரிந்ததால் தன் தாய், சகோதரி ஆகியோர்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். அவரது குடும்ப சூழ்நிலை குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:–
நான் மரத்தான் ஒட்டப்பந்தயங்களில் வேகமாக ஒடுவதற்காக சத்தான உணவு வகைகள் எதுவும் சாப்பிட முடிவதில்லை. தினசரி சாப்பிட மூன்று வேளை உணவுகள் கிடைத்தால் போதும் என்னும் நிலையில் வாழ்ந்து வருகிறோம்.
எனக்கு வலங்கைமான் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால் பரிந்துரையின் பெயரில் திருவாரூர் மாவட்ட தொழில் மையம் மூலமாக வங்கி கடன் உதவி ஒரு லட்சத்து பத்தாயிரம் கிடைத்தது.
அதன் மூலம் விளையாட்டு சீருடை தைக்கும் கடை வைத்துள்ளேன் அவையும் எதிர்பார்த்த அளவு வருமானத்தை தரவில்லை மேலும் எனது விருப்பம் மரத்தான் ஒட்டத்தில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு எனது தாய்க்கும் என் தாய் நாடடுக்கும் பெருமை சேர்ப்பதே எனது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளேன். தற்போது திருவாரூர் மாவட்ட அளவில் மரத்தான் ஒட்டபந்தயத்தில் ஐந்து நபர்களில் நானும் ஒருவனாகவும், மாநில அளவில் இருபது நபர்களில் ஒருவனாக இருக்கிறேன்.
மேலும் எனக்கு மரத்தான் பந்தயத்தில் மேன்மேலும் வெற்றி பெற விளையாட்டு துறையோ தொண்டு நிறுவனகங்களோ தொண்டுள்ளம் கொண்ட தனி நபரோ எனக்கு உதவியும் ஊக்கமும் தந்தால் நான் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவானாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.