வியாழன், 31 டிசம்பர், 2015

சவுதியில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது

சவுதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவுதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
1⃣ தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
2⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract papper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
3⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
4⃣ ஊதியத்தை தாமதமாக தந்தாலோ, OT ஊதியம் வழங்காமல் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறிதினாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
5⃣ ஒரு நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அல்லது வேலை வழங்கவில்லை என்றாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
6⃣ தங்கள் நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கு 25000 ரியால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 5 நாட்களில் அந்த நிறுவனம் மூடப்படும்.
7⃣ விசாவை விற்க்கும் நிறுவனங்களுக்கு 50000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
8⃣ ஒரு நிறுவனம் உரிமம் இல்லாமல் ஆட்களை சேர்த்தால் 45000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
9⃣ ஒருமுறை அபராதம் செழுத்திவிட்டு அதே தவறை திரும்ப செய்தால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும்.
🔟 அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும்.

Mohamed Safiyullah's photo.