இந்து மகா சபையின் தேசியத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கமலேஷ் திவாரி வன்முறை வார்த்தைகளை வரைமுறையின்றி பேசி வருகிறார்.
சமீபத்தில் முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் அவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருக்கிறார்.
கடும் கண்டனத்திற்குரிய கமலேஷின் இந்த வெறிப் பேச்சு ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. வட இந்தியா முழுவதையும் உஷ்ணத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கிறது.
இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி காவி பயங்கரவாதி கமலேஷுக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளும் முஸ்லிம்கள், நபிகள் நாயகத்தின் கண்ணியத்தின் மீது சிறு துரும்பு விழுவதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நபிகளாரின் கண்ணியத்தை நிலைநாட்டுவதற்காக தம் உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டார்கள். அதற்காக வட இந்தியாவில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் முழுமையாக ஆதரிக்கிறது.
நாட்டைத் துண்டாடும் இவரது பேச்சுக்காக பலமுறை கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட போதும் இவர் தன்னைத் திருத்திக் கொள்ள தயாராக இல்லை.
எனவே தற்போது இவரை கைது செய்திருக்கும் உ.பி.மாநில அரசு வழக்கம் போல சிறையிலடைத்து சோறுபோடும் வேலையைப் பாராமல் இவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கடும் பிரிவுகளில் வழக்குப் பதிந்து இந்த தேசத் துரோகியை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டுமென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு
M.முஹம்மது யூசுப்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
M.முஹம்மது யூசுப்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்