10000 வகை நெல் வகைகள் இருந்த நம் தமிழகத்தில் எல்லாமே அழிந்த நிலையில் பல வகை நெல்களை மீட்டுத் தந்தவர்தான் திரு.நெல் ஜெயராமன் அவர்கள்.
நெல் எனும் அடைமொழியை ஜெயராமன் அவர்களுக்கு சேர்த்தவர் ஐயா.நம்மாழ்வார் அவர்கள்.
திரு.நெல்.ஜெயராமன் அவர்கள் பல பாரம்பரிய நெல் வகைகளை மீட்கத் தொடங்கிய பிறகே இயற்கை விவசாயம் செழிக்கும் எனும் நம்பிக்கை எல்லோரிடமும் ஏற்பட்டது.
இவரை திருத்துறை பூண்டியில் நானும் எனது மகள் 'நலம்' கௌரியும் சந்தித்தோம்.
நம் அமைப்பு சார்ந்து இவைகளை இன்னமும் வெளிக் கொண்டு வர முடிவு செய்துள்ளேன்.
இயற்கை விவசாயத்தில் உள்ள முக்கிய பிரச்சனையே இயற்கை உற்பத்தியை விட இன்று வாங்கும் மக்கள் சக்தி அதிகம்.
இயற்கை விவசாயிகள் அதிகம் உற்பத்தியாக வேண்டும்.
கரும்புக்கு விலை கேட்டு போராடும் என் அன்பு விவசாயிகளே!.
தனமானத்தோடு இயற்கை விவசாயம் செய்வோம் வாருங்கள்.
தனமானத்தோடு இயற்கை விவசாயம் செய்வோம் வாருங்கள்.
யாரையும் இனி மண்டியிடத் தேவை இல்லை.
பாரம்பரிய உணவுகளை காப்போம்.
இயற்கையை மதிப்போம்.
இயற்கையை மதிப்போம்.
உணவே மருந்து...