சனி, 12 டிசம்பர், 2015

SDPI யுடன் இணைந்து உதவுவதற்கு முன்வந்துள்ளது உச்சிப்புளி நேஷனல் அகாடமி

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SDPI யுடன் இணைந்து உதவுவதற்கு முன்வந்துள்ளது உச்சிப்புளி நேஷனல் அகாடமி(NATIONAL ACADEMY SCHOOL ) பள்ளி:
தமிழகத்தில் கடுமையான வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தன்னுடையை அன்றாட தேவையை கூட நிறைவேற்ற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவுகின்ற வகையில் உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் , மாணவர்களும் ஒன்றிணைந்து 55000 ரூபாய் தொகையாகவும், உடைகளும் சேகரித்தனர். பின்பு புதுமடம் SDPI நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வெல்ல நிவாரணத்திற்கு 55000 ரூபாய் பணத்தையும், மற்றும் உடைகளையும் பள்ளி நிர்வாகம் புதுமடம் SDPI நகர் தலைவர் ந.சதாம் உசேன் அவர்களிடம் ஒப்படைத்தனர் .இந்த நிகழ்வின் போது புதுமடம் நகர் SDPI நிர்வாகிகளும், சுலைகா கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அண்ணன் காமில் அவர்களும்,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். மாணவர்களுக்கு சிறந்த உதாரணமாகவும், ஆசிரியர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்ந்த உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளியை புதுமடம் SDPI நகர் சார்பாகவும், பொது மக்கள் சார்பாகவும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவன்..
சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI)
புதுமடம் நகர்.

Related Posts: