முறைகேடாக தன் பெயரில் சிம்கார்டு பயன்படுத்தப்படுவதாக கோவை மாவட்ட காவல்துறை ஆணையரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் வாடிக்கையாளருக்குத் தெரியாமலேயே, அவர்களது சிம்கார்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த நாகநந்தினி என்பவர் தனக்கு தெரியாமல் தன் பெயரில் 4 சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவதாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்திற்கு தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தன் பெயரில் சிம்கார்டுகள் முறைகேடாக பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணை காவல்நிலையத்தில் புகார் அளிக்க, சிம்கார்டு நிறுவனம் பரிந்துரை செய்ததை அடுத்து, இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.