திங்கள், 4 ஜூலை, 2016

சவுதி அரேபியா தாயிப் விபத்தில் உம்ரா யாத்திரிகர்கள் 13 பேர் பலி..

சவுதி:
சவுதியில் பேருந்து விபத்து : 10 இந்தியர்கள் 
உட்பட 13 :பேர் பலி 
சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் 10 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள ஜூபாலியில் இயங்கும் நாசர் அல் ஹாஜிரி என்ற நிறுவனத்தின் பேருந்து நேற்று பணியாளர்களை ஏற்றி சென்ற போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 47 பணியாளர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 29 காயமடைந்துள்ளனர், அதில் 12 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய பலியாகி உள்ளவர்களில் 10 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் நேபால் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அதிலும் இந்தியர்கள் அனைவரும் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர்.



Related Posts: