திங்கள், 4 ஜூலை, 2016

மதுரை ஆதீனத்தை இந்து மதத்திலிருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி அதிரடி

முதல்வர் ஜெயலலிதா இஸ்லாமிய மக்களுக்காக அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 20 வது ஆண்டு நோன்பு திறப்பு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தொழில் மையத்தில் கடந்த 2 ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இஸ்லாமிய கோட்பாட்டின்படி வழங்கப்படும் நோன்பு கஞ்சியை மதுரை ஆதினம் அருந்தினார்.
Aadhinam
இது இந்து மத அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக இந்து மக்கள் கட்சியினர், மதுரை ஆதினத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, அமாவாசை தினமான இன்று காலை, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், இதுதொடர்பான பூஜை நிகழ்ச்சிகளில் இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர். அதன் மாநில பொதுச் செயலாளர் ராம்குமார்தான், இந்து மதத்தை விட்டு ஆதீனத்தை தள்ளி வைக்கும் பூஜையை நடத்தினார்.
மேலும், இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மதுரை ஆதினத்தை அனைத்து இந்து மத ஆதினங்களும் புறக்கணிக்க வேண்டும் என ராம்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts: