செவ்வாய், 19 ஜூலை, 2016

13 வயது சிறுமி தவ்ஃபீக் சுல்தானா தற்கொலை செய்து கொண்டால் என சி.பி.ஐ. வழக்கை முடித்து விட்டது ..


இளம் பெண் ஸ்வாதி கொலை வழக்கில், 8 நாளில் கொலையாளியை கைது செய்த தமிழக காவல்துறை !
ஆண்டுகள் பல ஓடியும் 13 வயது திருச்சி மாணவி தவ்ஃபீக் சுல்தானா வழக்கில் இன்னும் யாரும் கைது செய்யவில்லை .. ஏன் ?
ஸ்வாதி பிராமண பெண் 8 நாட்களில் குற்றவாளி கைது ..
தவ்ஃபீக் சுல்தானா முஸ்லீம் பெண் என்றதினால் இன்னும் குற்றவாளி கிடைக்க வில்லையா ?
முதன் முதலில் திருச்சி சட்டம் ஒழுங்கு காவல்துறை தவ்ஃபீக் சுல்தானா வழக்கை விசாரித்தது குற்றவாளி கைது முடியவில்லை ?
இந்திய தேசிய லீக் கட்சி மகளிர் அணி சார்பாக தமிழக காவல்துறை இயக்குனரை சந்தித்து குற்றவாளிகளை உடனே கண்டு பிடிக்க கோரியும் இந்த வழக்கை சி.பி.சிஐ.டி.க்கு மாற்றவும் கோரியது இதே கோரிக்கையை முன் வைத்து மற்ற சமூக அமைப்புகளும் கோரியது அதன் பின் சி.பி.சி.ஐ.டி க்கு தமிழக அரசு தவ்ஃபீக் சுல்தானா வழக்கை மாற்றியது ..
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக ஊடகத்தில் தவ்ஃபீக் சுல்தானா சம்பவத்தை கோபியம் , தடயம் மூலம் பொதுத்தளத்திற்க்கு கொண்டு வந்தோம் என்பது குறிப்பிடதக்கது ..
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வழக்கறிஞர் டைட்டஸ் மூலம் பல மாதங்கள் ஆகியும் தவ்ஃபீக் சுல்தானா வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என கோரினோம் ..
வழக்கறிஞர் டைட்டஸ் அவர்களின் திறமையான வாதத்திறமையால் இது தற்கொலை இல்லை கொலை தான் என வழக்கை சி.பி.ஐ மாற்றியது மதுரை உயர்நீதி மன்றம் முன்று ஆண்டுகள் கழித்தும் சி.பி.ஐ குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை ?
கடந்த 01-06-2016 திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிதுறை நடுவரிடம் சி.பி.ஐ. தவ்ஃபீக் சுல்தானா தற்கொலை செய்து கொண்டார் என வழக்கை முடித்து சான்றுகள் என பொய்யை ஒப்படைத்துள்ளது ..
திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிதுறை நடுவர் அவர்கள் தவ்ஃபீக் சுல்தானா தாயார் மஹபூப் நிஸா அவர்களுக்கு ஒரு சம்மன் அனுப்பி உள்ளார் அதில் உங்க மகள் வழக்கு சம்மந்தமாக ஆட்சேபணை எதுவும் இருந்தால் வருகின்ற 25-07-2016 அன்று நீதி மன்றதிற்க்கு வர வேண்டும் தவறும் பட்சத்தில் உமது தரப்பு விசாரனை முடிக்கப்படும் என உள்ளது ..
சி.பி.ஐ. எப்படி தற்கொலை வழக்காக முடிக்கின்றது என்றால் ரயில் டிரைவரிடம் வாக்கு மூலம் பெற்றதாகவும் அவர் ஒரு பெண் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டால் என்றும் சி.பி.ஐ.வழக்கை முடித்துள்ளது ..
நமது கேள்வியே
13 வயது சிறுமி தற்கொலை செய்யும் போது எல்லா துணிகளையும் கலைந்து நிர்வாணமாக தற்கொலை செய்வாளா ?
சிறுமியின் உடல் பாகங்கள் பலவற்றை காணவில்லையே ஏன் ?
சிறுமி தவ்ஃபீக் சுல்தானா படித்த பள்ளியில் விசாரனையே நடத்தவில்லையே ஏன் ?
இப்படி பல கேள்விகள் நமக்கு எழுந்தாலும் சி.பி.ஐ.தற்கொலை என வழக்கை முடித்து விட்டது ..
காரணம் தவ்ஃபீக் சுல்தானா பார்பண பெண் இல்லை
துவா செய்வோம் இந்த சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொடூர கொலை செய்த குற்றவாளி நாசமாகட்டும் ஆமீன் ..
நன்றி ஜனாப்தடா ஜெ.ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி ..