செவ்வாய், 19 ஜூலை, 2016

இது போன்ற கீழ்த்தரமான செயல்களை தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் செய்தது கிடையாது.

சுலைமான் மன்பயீ என்பவர் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த தாக்குதலை தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் செய்தார்கள் என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், சுவரொட்டிகள் மூலமாகவும் வேண்டுமென்றே சில விஷமிகள் அவதூறை பரப்பி வருகின்றனர்.
இது போன்ற கீழ்த்தரமான செயல்களை தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் செய்தது கிடையாது. இந்த அவதூறுகளை பரப்புபவர்கள் தான், இத்தனை ஆண்டு காலமாக தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக வன்முறைகளை தமிழகத்தில் நடத்தி கொண்டிருப்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
கடந்த காலங்களில் TNTJ சகோதரர்கள் தாக்கப்பட்ட நேரங்களில் கூட, தவ்ஹீத் ஜமாஅத் இது போன்ற வன்முறையை கையில் எடுத்தது இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். கருத்தை கருத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை இந்த ஜமாஅத் உறுதியாக கடைப்பிடித்து வருகிறது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கிலேயே இந்த அவதூறை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருவோர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய தருகிறோம்.
இப்படிக்கு
மு.முஹம்மது யூசுப்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
ஊடக பொறுப்பாளர்
பா.அப்துல் ரஹ்மான்
97890 30302