திங்கள், 18 ஜூலை, 2016

கஷ்மீரை ஃபலஸ்தீனுடன் ஒப்பிட்ட நோம் சொம்ஸ்கி

கஷ்மீரில் தற்போது நடந்தேறும் மனித உரிமை மீறல்களை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல அரசியல் விமர்ச்சகர் நோம் சொம்ஸ்கி தற்போதைய நிகழ்வுகள் தனக்கு அதிர்சியளிகின்றன என்று கூறியுள்ளார். மேலும் இந்த மனித உரிமை மீறல்களை “வெறித்தனம்” என்றும் அவர் சாடியுள்ளார்.
கடந்த காலங்களில் கஷ்மீர் குறித்து தான் இந்தியாவில் பேசியிருப்பதாகவும் தனது உரைக்குப் பிறகு தான் இந்தியாவில் தங்கியிருந்த நாள் எல்லாம் தனக்கு காவல்துறை பாதுகாப்பு தேவை என்று அறிவுறுத்தப்படும் அளவிற்கு வெறித்தனத்தை சந்திக்க நேர்ந்தது என்று அவர் கூறியுள்ளார்.
2015 ஜூலை மாதம் இந்திய ராணுவம் கஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் காஷ்மீரைக் காட்டிலும் ஃபலஸ்தினுக்கு தான் முன்னுரிமை கொடுப்பது அந்த விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு பெரும்பகுதி இருக்கின்றது என்கிற காரணத்தினால் என்றும், கஷ்மீரை பொறுத்தவரை அது அப்படி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
கஷ்மீரில் ராணுவ அராஜகங்களை கண்டித்த அவர், தான் பலஸ்தீனுக்கு என்ன செய்தாரோ அதை கஷ்மீருக்கும் செய்ய வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
புர்ஹான் வாணி கொல்லபப்ட்டதை அடுத்து கஷ்மீரில் ஏற்பட்ட பதற்றத்தில் இதுவரை 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு இன்னும் அமுலில் இருக்கின்றது.

thanks to : http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/