திங்கள், 18 ஜூலை, 2016

கஷ்மீரில் ராணுவத்தின் அராஜகத்தை வெளிக்கொணர்ந்த காவல்துறை அதிகாரி


மத்திய ரிசர்வ் போலீஸ் கஷ்மீர் வீதிகளில் இறங்கி மக்களை காயப்படுத்தி, ஊனப்படுத்தி கொலை செய்கிறது என்று கஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
முஹ்ஹம்மத் அஷ்ரஃப் என்கிற காவல்துறை அதிகாரி, மத்திய ரிசர்வ் போலீசார், பெண்களை மானபங்கப் படுத்துகிறார்கள் எனவும், தனியார் வாகனங்களை செதப்படுத்துகிரார்கள் எனவும், மக்களை எந்த வித காரணங்களும் இல்லாமல் தாக்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் இவர்களின் இத்தகைய செயல்களை தடுக்க முற்படும் காவல்துறையினரை சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் அவர் தெரிவத்துள்ளார்.
இவர் தெற்கு கஷ்மீரில் உள்ள இஸ்லாமாபாத் மாவட்டத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தனது படையினர் பணி செய்யும் இடங்களில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று கூறும் இவர், பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவது, மக்களை தேவை இல்லாமல் தாக்குவது இவை அனைத்தும் ரிசர்வ் போலீசின் கைவண்ணம் என்று கூறியுள்ளார். மேலும் ரிசர்வ் போலீசார் கஷ்மீர் காவல்துறையினரையும் தாக்கிய தருணங்கள் உண்டு என்று கூறியுள்ளார்.
பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவது குறித்து கூறிய அவர், 90 பட்டாலியனை சேர்ந்த ரிசர்வ் போலீசார் ஒரு கர்பிணிப் பெண்ணை மானபங்கப்படுத்தியதும் அந்தப் பெண்ணை அவர்களிடம் இருந்து காவல்துறையினர் காப்பாற்றவே காவல்துறையினரையும் அவர்கள் தாக்கினர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் குல்கம் பகுதியில் ஒரு சிறுமியை அவர்களிடம் இருந்து காப்பாற்றிய தருணத்தில் அவர்களை கொன்றுவிடுவதாக ரிசர்வ் போலீசார் மிரட்டினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோய்வாய்ப்பட்ட தனது தாய் மற்றும் சகோதரனுடன் பயணித்த அந்தப் சிறுமியை அவர்கள் மானபங்கப்படுத்தினர் என்றும் அவர்கள் அந்தப்பெண்ணிடம் அனைத்து எல்லையையும் தாண்டிவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். நாங்கள் வெட்கத்தில் தலைகுனித்து போனோம் என்றும் அவர்கள் எங்களை முடக்க நினைத்தனர், இருந்தும் அப்பெண்ணை அவர்களிடம் இருந்து காப்பாற்றி அனுப்பி வைத்தோம் என்று அவர் கூறியுள்ளார்.
எந்தக் காரணமும் இல்லாமல் தனியார் வாகனங்களை நிறுத்துவது, அதிலுள்ள பெண்களிடம் சில்மிஷம் செய்வது, ஆண்களை தாக்குவது, வாகனங்களை சேதப்படுத்துவது இவர்களின் வாடிக்கை என்றும், இவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை என்றும் இவர்கள் இந்த பள்ளதாக்கிற்கு அமைதியை கொண்டு வரப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

thanks to :http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/