புதன், 20 ஜூலை, 2016

பாபரி மஸ்ஜித் வழக்கில் முக்கிய மனுதாரர் ஹாஸிம் அன்ஸாரி மரணம்!


அயோத்தியா:பாபரி மஸ்ஜித் வழக்கில் முக்கிய மனுதாரர் முஹம்மது ஹாஸிம் அன்ஸாரி புதன் கிழமை அதிகாலையில் மரணமடைந்தார்.96 வயதான அன்ஸாரி நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அயோத்தியில் ஒரு டெய்லராக வேலைப்பார்த்து வந்த அன்ஸாரி, 1949-ஆம் ஆண்டு முதல் பாபரி மஸ்ஜித் வழக்கில்கட்சிதரார் ஆவார்.சுன்னி செண்ட்ரல் வக்ஃப் போர்ட் 1961-ஆம் ஆண்டு மனுவை சமர்ப்பித்திருந்தது.இம்மனுவை சமர்ப்பித்த 7 நபர்களில் ஹாஸிம் அன்ஸாரியும் ஒருவர்.
.