புதன், 20 ஜூலை, 2016

நடந்ததை நடந்தமாறி எழுதுங்கடா......!

டீ "க்கடையில் "பல்பு" வெடித்து ....டீமாஸ்டர் "நகம் " துண்டான து.....!!
'
'
'
'
'
தினகரன் :
- டீ "க்கடையில் "பல்பு " வெடித்து...டீமாஸ்டர் "விரல் " துண்டானது....!
போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.......!!
'
'
'
'
'
'
'
'
தினத்தந்தி :
- டீ "க்கடையில் "பாய்லர் " வெடித்து...டீமாஸ்டர் "கை யே " துண்டானது.....!
தாடிக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்......!!
'
'
'
'
'
'
'
தினமணி :
- டீ "க்கடையில் "பாய்லர் "வெடித்து... டீமாஸ்டர் கவலைக்கிடம்..இப்பவோ.....! அப்பவோ....! னு இழுத்துக்கிட்டிருக்கு....! இந்த நாச வேலைக்கு காரணமான தீவிரவாதி "ஜாகிர் உசேன் " யை போலீஸார் தேடிவருகிறார்கள்.......!!
'
'
'
'
'
'
'
TIMES NOW arnab goswami :
- டீ "க்கடையில் சக்தி வாய்ந்த "பாம் " வெடித்ததில் டீமாஸ்டர் உட்பட இரண்டு பேர் பலி..! அதாவது...? செத்தேபோய்டாங்க......!
இந்த நாசவேலைக்கு காரணமான தீவிரவாதி ஜாகிர் உசேன் " பிடிபட்டான்.....? அவனிடம் விசாரணை செய்ததில் அவன் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது.....! இவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட "தீப்பெட்டி "யில் ஒரு குச்சி குறைவாக உள்ளதால் .... அந்த குச்சியை வைத்துத்தான் "பாம் "யை பற்ற வைத்திருக்கிறான் என்று இவனை கைது செய்து இவன் கூட்டாளிகளை பிடிக்க....போலீஸார் தீவிர.வேட்டையில் இறங்கியுள்ளனர்......!!
அட பொறம்போக்குகளா.........!
நடந்ததை நடந்தமாறி எழுதுங்கடா......!
ஏன்டா "பேனா "வை வெச்சு "பேய்க்கதை " எழுதுறீங்க.....!!!